31/302:திருக்குறள்-வெகுளாமை

செல்லா இடத்துச் சீனந்தீது செல்லிடத்தும் இல் அதனின் தீய பிற.சினம் வலியவர் மீது  கொண்டால் தனக்கே தீமை என்றும் தன்னைவிட மெலியவர் மிது கொண்டால் அதைவிட தீமை பெரியதில்லை என அறிந்து நடக்க வேண்டும்.மனிதர்கள் வாழ்வில் சினம் என்பது ஒரு பாகம் . நாம் ஒருவர் மீது கோபம் கொள்ளும்போது அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்தே சினம் கொள்ளவேண்டும். நாம் சினம் கொள்பவர்கள் எங்களை விட பல சாலியாக இருந்தால் எமக்கே தீமையாக முடியும் .எங்களை விட பலம் இல்லாவர்களிடம் எங்கள் வீரத்தை காட்டுவதும் அதை விட தீமை ஏதுமில்லை.நாங்கள் சினம் கொள்ளும் எதிரிகள் எந்த நிலையில் இருக்கின்றார்கள் என அறிந்தே நடக்கவேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் எழுதுகோல் முனையில். பாலாஜீ பாலசுப்பிரமணியம்.

Comments