Posts

48/480:திருக்குறள்-வலியறித்தல்

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும்.செல்வத்தின் அளவுபாராமல் வாரி கொடுத்தால் செல்வ நிலை விரைவில் கெடும்.மனிதர்களிடம் இருக்கும் செல்வங்களையெல்லாம்  மற்றவர்களுக்கு தானமாக கொடுத்து விட்டால் செல்வம் அழித்து விரைவில் இல்லாமலே போய்விடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம். உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை  நெரிக்கப்படுகின்றது என்று பொருள். 

48/479:திருக்குறள்-வலியறித்தல்

அளவறித்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். பொருளின் அளவு அறிந்து செலவு செய்யாதவன் வாழ்க்கை, பொருள் இருப்பதுபோல் தோன்றி அழியும். மனிதர்களின் வாழ்வில் வாழ்வியல் அளவறித்து வாழதவர்கள் செல்வத்தின் அளவை அறிந்து செலவு செய்யாதவர்கள் வாழ்வினில் செல்வம் இருப்பதுபோல் தெரிந்தாலும் அது அவர்களுக்கு தெரியாமலே அழிந்துபோகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம். உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை  நெரிக்கப்படுகின்றது என்று பொருள். 

48/478:திருக்குறள்-வலியறித்தல்

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை.வருவாய் அளவுடன் இருந்தாலும் தப்பில்லை அதைவிட  செலவு அதிகமாக இருத்தல் கூடாது. வருமானம் குறைவாக இருந்தாலும் வாழ்க்கையை நடாத்தி கொள்ளலாம் வருமானத்தைவிட செலவு அதிகமாக இருந்தால் வாழ்கையை நடாத்தமுடியாது  அதனால் வருமான வரவுக்கு குறைவான செலவு இருப்பதே சிறப்பாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.

48/477:திருக்குறள்-வலியறித்தல்

ஆற்றின் அளவறித்து ஈக அது பொருள் போற்றி வழங்கும் நெறி. முறைப்படி செல்வத்தின் அளவு அறிந்து கொடுத்தால் அதுவே மேன்மையான நெறி.மற்றவர்க்கு ஏதாவது உதவி செய்யவேண்டுமென்றால் செய்யலாம் முடிந்தவரை எங்களிடம் இருக்கும் செல்வத்தின் அளவை அறிந்து கொடுக்கப்பழகவேண்டும் அதுதான் வாழ்வின் வாழ்வியல் சிறப்பாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம். உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை  நெரிக்கப்படுகின்றது என்று பொருள். 

48/476:திருக்குறள்-வலியறித்தல்

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிரக்கிறுதி யாகிவிடும். மரத்தின் நுனி கொம்பு வரை ஏறுவது அவன் திறமை அதற்குமேலும் ஏற விருப்பினால் உயிருக்கு முடிவு வந்து விடும். மரக்கிளைகளில் ஏறிவிளையாடுவது மனிதர்களின் மதிநுட்பம் மரத்தின் கிளைகள் முறியும் வரை ஏறுவது மரணத்தை தழுவிக்கொள்ள எடுக்கும்  மதிகெட்ட முடிவாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம். உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை  நெரிக்கப்படுகின்றது என்று பொருள். 

48/475:திருக்குறள்-வலியறித்தல்

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்சால மிகுத்துப் பெயின்.மயிலிறகு ஆனாலும் அளவிற்கு அதிகமாக ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்து விடும். பாரங்கள் அற்ற பொருட்கள் ஆனாலும் அவற்றை அளவுக்கு அதிகமாக வண்டிகளில் ஏற்றக்கூடாது அப்படி அதிகாமாக ஏற்றி வண்டியை செலுத்த முற்படும்போது வண்டியின் அச்சாணிகள் உடைந்து விடலாமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு. 

48/474:திருக்குறள்-வலியறித்தல்

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியத்தான் விரைந்து கெடும்.எதிரியின் வலியறியாதவனும் சமாதானமாக போகத்தெரியாதவனும்,தற்புகழ்ச்சி உடையவனும் உடனே கெடுவான்.எதிர்பவர்களின் வலிமையையும் வலியையும் அறிந்துகொண்டு சமாதானமாக போகத்தெரியாதவல்களும் தம்மால் அனைத்தும் முடியுமென்று தற்ப்பெருமை கொள்பவர்களும் உடனே அல்லது காலப்போக்கில் தானாக கெட்டளிந்து போவார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள். தினம் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை  நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.