48/474:திருக்குறள்-வலியறித்தல்
திருக்குறள்:
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியத்தான் விரைந்து கெடும். (குறள் 474 - அதிகாரம்: வலியறிதல்)
பொருள்:
காலச் சூழலுக்கு ஏற்பப் பொருந்தி நடக்காதவனும், தனது பலத்தின் அளவை அறியாதவனும், தன்னைத் தானே வியந்து பெருமைப்படுத்திக் கொள்பவனும் விரைவிலேயே கெட்டு அழிவான்.
விரிவாக்கம்:
'வலியறிதல்' (Knowing the Power/Strength) அதிகாரத்தில் அமைந்துள்ள இக்குறள், ஒரு தலைவனிடம் இருக்கக் கூடாத மிக ஆபத்தான மூன்று குணநலன்களைச் சுட்டிக்காட்டுகிறது.
1. சூழலுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளாமை (அமைந்தாங் கொழுகான்),
2. தனது உண்மையான பலத்தையும் பலவீனத்தையும் துல்லியமாக எடைக் காணத் தெரியாமை (அளவறியான்),
3. தன் தகுதிக்கு மீறித் தன்னைத்தானே புகழ்ந்து கொண்டு அகம்பாவம் கொள்ளுதல் (தன்னை வியத்தான்).
இந்த மூன்று முட்டாள்தனமான குணங்களும் இணைந்த ஒருவன், தான் சார்ந்த அமைப்பையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மிக விரைவாக அழிவின் விளித்திற்குக் கொண்டு சென்றுவிடுவான்.
நிர்வாகத்திலும் பெருநிறுவன மேலாண்மையிலும், தற்பெருமையும் எதார்த்தமற்ற தன்மதிப்பீடும் மிகப்பெரிய வீழ்ச்சியைப் பரிசளிக்கும். உணர்ச்சிவசப்பட்ட வீராவேசப் பேச்சுகளும், எதார்த்தப் புள்ளிவிவரங்களை ஏற்க மறுக்கும் தலைமையும் எங்குமே வெற்றியைத் தராது. தனது உண்மையான திறனைப் பகுப்பாய்வு செய்து, காலத்திற்கேற்பப் பணிவோடு செயல்படும் அமைப்பான ஒருங்கிணைப்பே ஒரு நிறுவனத்தையும் தலைவனையும் பாதுகாத்து நீண்டகால வெற்றியை உறுதி செய்யும் என்பதை வள்ளுவர் தெளிவாக உணர்த்துகிறார்.
English Translation:
Thirukkural:
Amainthaang Ozhugaan Alavariyaan Thannai
Viyaththaan Viraiththu Kedum.
Meaning:
He who does not act in harmony with circumstances, knows not his own strength, and indulges in self-admiration will swiftly perish.
Explanation:
Valluvar highlights three fatal flaws of leadership: failing to adapt to operational realities, remaining oblivious to one's true capacity (alavariyaan), and engaging in hubris or self-aggrandizement (thannai viyaththaan). A leader or organization trapped in these traits inevitably collapses. Emotional posturing and arrogant rhetoric provide no immunity against reality; sustainable survival and administrative excellence are achieved through objective self-assessment, adaptability, and structured organization.
— தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.
[God to man is Gita; Man to God is Thiruvasagam; Man to man is Thirukkural].
"உணர்ச்சிகரமான பேச்சுகள் கைதட்டல்களை மட்டுமே தரும்; அமைப்பான ஒருங்கிணைப்பு மட்டுமே தீர்வைத் தரும்."

Comments