Posts

49/483:திருக்குறள்-காலம் அறிதல்

அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின்.ஆற்றலுடன் காலத்தின் தன்மைக்கேற்ப செயல் மேற்கொண்டால் செய்ய இயலாதது ஒன்றும் உட்டோ? இந்த உலகியல் வாழ்வியலில் செய்கைகளில் காலமறிந்து செயல்ப்படத்தொடங்கினால் செய்து முடிக்க முடியாத செயல் எதுவும் இருக்கமுடியாது என எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம்.வீழ்வது நாம் ஆயினும் வாழ்வது தமிழாக இருக்கவேண்டும்.

49/482:திருக்குறள்-காலம் அறிதல்

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை  ஆர்க்கும் கயிறு.காலத்திற்கேற்றார் போல் வாழ்வதும் செல்வத்தை கட்டிக்காக்கும் கயிறு போலாகும். வாழ்வியல் காலத்தை அறிந்து அதற்கேற்றாப்போல் வாழுதல் உழைத்த செல்வத்தை வீண் போகாது வாழ்க்கைக்கு உகந்ததாக அமைத்து கொள்ள உதவும் வாழ்வியல் சிந்தனைகள் போன்றதாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம்.வீழ்வது நாம் ஆயினும் வாழ்வது தமிழாக இருக்கவேண்டும்.

49/481:திருக்குறள்- காலம் அறிதல்

பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. காக்கை கூட கோட்டானை பகலில் வென்றுவிடும் அது போன்று அரசனும் காலமறிந்து போர்தொடுக்கவேண்டும். காக்கைகள் கூட கோட்டான் என்கின்ற பறவையினத்தை பகலாயிருந்தால் தங்களின் உயிர்களை காப்பாற்றி வென்று விடும் அதுபோலவே அரசனும் சிறந்த நேரத்தை அறிந்து போர்க்காலமறிந்து போரைத்தொடுக்கவேண்டுமென. எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.

48/480:திருக்குறள்-வலியறித்தல்

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும்.செல்வத்தின் அளவுபாராமல் வாரி கொடுத்தால் செல்வ நிலை விரைவில் கெடும்.மனிதர்களிடம் இருக்கும் செல்வங்களையெல்லாம்  மற்றவர்களுக்கு தானமாக கொடுத்து விட்டால் செல்வம் அழித்து விரைவில் இல்லாமலே போய்விடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம். உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை  நெரிக்கப்படுகின்றது என்று பொருள். 

48/479:திருக்குறள்-வலியறித்தல்

அளவறித்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். பொருளின் அளவு அறிந்து செலவு செய்யாதவன் வாழ்க்கை, பொருள் இருப்பதுபோல் தோன்றி அழியும். மனிதர்களின் வாழ்வில் வாழ்வியல் அளவறித்து வாழதவர்கள் செல்வத்தின் அளவை அறிந்து செலவு செய்யாதவர்கள் வாழ்வினில் செல்வம் இருப்பதுபோல் தெரிந்தாலும் அது அவர்களுக்கு தெரியாமலே அழிந்துபோகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம். உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை  நெரிக்கப்படுகின்றது என்று பொருள். 

48/478:திருக்குறள்-வலியறித்தல்

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை.வருவாய் அளவுடன் இருந்தாலும் தப்பில்லை அதைவிட  செலவு அதிகமாக இருத்தல் கூடாது. வருமானம் குறைவாக இருந்தாலும் வாழ்க்கையை நடாத்தி கொள்ளலாம் வருமானத்தைவிட செலவு அதிகமாக இருந்தால் வாழ்கையை நடாத்தமுடியாது  அதனால் வருமான வரவுக்கு குறைவான செலவு இருப்பதே சிறப்பாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.

48/477:திருக்குறள்-வலியறித்தல்

ஆற்றின் அளவறித்து ஈக அது பொருள் போற்றி வழங்கும் நெறி. முறைப்படி செல்வத்தின் அளவு அறிந்து கொடுத்தால் அதுவே மேன்மையான நெறி.மற்றவர்க்கு ஏதாவது உதவி செய்யவேண்டுமென்றால் செய்யலாம் முடிந்தவரை எங்களிடம் இருக்கும் செல்வத்தின் அளவை அறிந்து கொடுக்கப்பழகவேண்டும் அதுதான் வாழ்வின் வாழ்வியல் சிறப்பாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம். உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை  நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.