Posts

56/555:திருக்குறள்- கொடுங்கோன்மை

அல்லற்பட்டு அற்றாது அழுத கண்ணீரன்றே செல்வத்தை தேய்க்கும் படை. நீதியற்ற அரசு செலுத்தாமையால் மக்கள் வருந்தி விடும் கண்ணீரே அவனது செல்வத்தை அழிக்கும் கருவி. நீதி நெறியில்லாத அரசாங்கம் சிறந்த முறையில் சிறந்தவற்றை வழக்காமையால் நாட்டுமக்கள் விடும் கண்ணீரே அந்த அரசாங்கத்தை வீழ்த்தும் மக்களின் ஆனையாகுமென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

56/554:திருக்குறள் கொடுங்கோன்மை

கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு.நீதி தவறி ஆட்சி செலுத்தும் மன்னன் அச்செலால் குடிகளையும் பொருளையும் ஒருங்கே இழப்பான்.அரசாட்சியில் நீதி தவறி ஆட்சி புரியும் அரசாங்கம் நாட்டு மக்களையும் அதன் உடமைகளையும் ஆரசாட்சியையும் ஒன்றாகவே இழக்கநேரிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

56/553:திருக்குறள்- கொடுங்கோன்மை

 நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும் . நாள் தோறும் நாட்டு நன்மை தீமைகளை  ஆராயாது ஆட்சி செய்யும் மன்னன் நாள் தோறும் நாட்டை இழந்து வருதல் போன்றது தினம்தோறும் நாட்டுமக்களின் நன்மை தீமைகளை அறியாது  அரசாங்கம் ஆட்சி நாடத்தி வந்தால்  அந்த நாட்டையும் மக்களால் கொடுக்கப்பட்ட பதவிகளையும் சிறிது சிறிதாக இழக்கநேரிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு  பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும் 

56/552:திருக்குறள்- கொடுங்கோன்மை

 வேலொடு நின்றான் இடு என்றது போலும் கோலொடு நின்றான் இரவு. செங்கோல் ஏந்திய மன்னன் மக்களிடம் பொருள் வேண்டுதல் வழிப்பறி செய்வோன் வேல் கொண்டு பொருள் பறிப்பது போன்றதாகும்.அரசாங்கம் நடத்தும் ஆட்சியாளர்கள் மக்களிடம் பொன் பொருள் பணம் பறித்தல் வழிப்பறி செய்பவர்கள் ஆயுதங்களுடன் நின்று கொள்ளையடிப்பது போன்றதாகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

56/551:திருக்குறள்- கொடுங்கோன்மை

கொலைமேற்கொண்டாரிற் கொடியதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து.குடிகளை வருந்தி  நீதி நெறியின்றி அரசாளும் மன்னன் கொலைத்தொழில் செய்பவனைவிட கொடியவன்.இந்த உலகின் அரசியல் செய்யும் அரசுகள் ஆக இருந்தாலும் சரி அல்லது போராட்ட அமைப்புகள் ஆக இருந்தாலும் சரி குடிகளை வருத்தி நீதி நெறியின்றி மக்களை அடிமைப்படுத்தி  அரசாள நினைக்கும் அனைத்து அரசாட்சி ஆளார்களும் கொலைத்தொழில் செய்கின்றவர்களை விட கொடியவர்கள் என்றே எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ  பாலசுப்பிரமணியம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

55/550:திருக்குறள்- செங்கோன்மை

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர். அரசன் கொடியவர்களை கொலையின் மூலம் தண்டித்தால் பயிரின் நடுவிலுள்ள புற்களை அகற்றுதல் போன்றதாகும்.அரசாங்கம் குற்றம் செய்த கொடியவர்களை தூக்கு தண்டனை மூலம் தண்டித்தால் வயலில் பயிரிட்ட பயிர்களின் நடுவில் புற்களை அகற்றி களை எடுப்பது போன்றதாகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

55/549:திருக்குறள்- செங்கோன்மை

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடித்தல் வடுவன்று வேந்தன் தொழில்.குடிமக்கள் வருந்தாது தானும் வருத்தாது காத்து குற்றம் புரிந்தவர்க்கு தண்டனையளித்து வாழ்வது அரசன் தொழில். அஃது அவனுக்கு இழிவாகாது.அரசாங்கம் நாட்டில் வாழும் மக்களை வருத்தாது அரசாங்கமும் நீதி நேர்மை சட்ட ஒழுங்குகளை காத்து கொண்டு குற்றம் புரிந்தவர்களுக்கு தக்க தண்டனையை கொடுத்து அரசாங்கத்தை ஆட்சி செய்வது அரசின் கடமை அஃது அரசாங்க ஆட்சிக்கு என்றுமே கூடாத செயலாகாதென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.