Posts

65/650:திருக்குறள்-சொல்வன்மை

Image
இணரூழ்த்தும் நாறா மலரனையார் கற்றது உணர விரித்துரையாதார்.கற்றதை பிறர் அறியுமாறு  எடுத்துக்கூற இயலாதவர்  மலர்ந்திருந்தும் மனமற்ற கொத்து மலர் போன்றவர்.படித்தபடிப்பை மற்றவர்களுக்கு உதவும் வகையில் கற்றுக்கொடுக்க தகுதியில்லாதவர் நன்றாக படித்ந்திருந்தும் பூத்திருக்கும் மலர்கொத்தில் இருந்து  வெளியாகும் வாசனை இருந்தும் இல்லாதது போலவே கருதப்படுவாரென  எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

65/649:திருக்குறள்-சொல்வன்மை

Image
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றாதவர்.குற்றமற்ற சொற்களை சொல்லத் தெரியாதவர் பல சொற்களை சொல்லிக் கொண்டிருக்க விரும்புவர்.குறை குற்றமில்லாத வார்த்தைகளை பாவிக்க விரும்பாதவர்கள் வேறு விதமான வார்த்தைகளை பாவித்து கொண்ட பல தடவைகள் அதையே சொல்ல விரும்புவார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

65/648:திருக்குறள்-சொல்வன்மை

Image
விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது செல்லுதல் வல்லார் பெறின்.முறைப்படி இனியவற்றை சொல்பவரின் சொற்படி உலகம் விரைந்து ஏற்று நடக்கும்.சமுகத்துக்கு ஏற்றவாறு சிறந்த செயல்களை முன் நிறுத்தி செயல்பட விரும்புவோரின் வார்த்தைகளை அந்தந்த சமூகங்கள்  விரைவாக ஏற்றுக்கொண்டு நடைமுறை படுத்த முனையுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

65/647:திருக்குறள்-சொல்வன்மை

Image
சொலல்வல்லான் சோர்விலன் அஞ்சான்அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. சொல்லை பிறர் ஏற்குமாறு சொல்பவர்.சொல்லை மறவாதவர் சபைக்கு அஞ்சாமல் சொல்பவர் இவரை எவரும் வெல்லுதலரிது.பேசக்கூடியவர்கள் பேசியே சபையோரை ஈர்த்து விடுவார்கள் அதனால் மனத் துணிவுள்ளவர்களை யாராலும் வென்று விடமுடியாதென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

65/646:திருக்குறள்-சொல்வன்மை

Image
வேட்புத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள்.பிறர் விரும்புமாறு சொல்லி பிறர் சொல்லின் பயனறிந்து கொள்ளுதல் நல்லறிஞன் கொள்கை. மற்றவர்கள் விரும்பும் வகையில் கருத்துகளை எடுத்துரைப்பதும் மற்றவர்கள் கூறும் கருத்துக்களை ஆராய்ந்தறித்து சிறந்தவற்றை ஏற்றுக்கொள்வதும் அறிவுடையாரின் அறிவாகுமென  எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

65/645:திருக்குறள்-சொல்வன்மை

Image
சொல்லுக சொல்லுப்பிறிதோர் சொல் அச் சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.தாம் கூறவந்த  சொல்லிவிட வேறில்லை என அறிந்து திறமையாக செல்லுதல் வேண்டும்.நாங்கள் கூறவரும் சொல்லே அதிசிறந்த சொல்லேன தெரிவுசெய்தே கூறவேண்டும் அதை விட சிறந்த சொல்ல இருக்கவே கூடாதென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

65/644:திருக்குறள்-சொல்வன்மை

Image
திறன்றிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல்.கூறும் சொல்லின் திறனறிந்து ஒருவருக்கு சொல்ல வேண்டும் அதனினும் பொருளும் அறமும் வேறில்லை.சொல்ல போகும் சொல்லில் பொருள் அறிந்து செம்மையாக ஒரே சொல்லில் சொல்லவேண்டும் அந்த சொல்லில் இருக்கும் அறமும் பொருளும் விளக்கமும் வேறெந்த வகையிலும் நிகரில்லாமல் இருந்தல் வேண்டுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.