Posts

87/869:பகை மாட்சி திருக்குறள்

Image
செறுவார்க்குச் சேணிகவர் இன்பம் அறிவிலா அச்சும் பகைவர்ப் பெறின். அறிவில்லாதவரையும் அச்சமுடையவரையும் பகையாகப் பெற்றால் வெற்றி இன்பம் நிச்சயம்.புத்தியில்லா மனிதர்களையும் பயந்தசூபாவமுடையவர்களையும் எதிர்கொண்டால் வெற்றி என்பது என்றென்றும் நிதந்தரமாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம் .மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

87/868:பகை மாட்சி திருக்குறள்

Image
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு இன்னிலனாம் ஏமாப்பு உடைத்து.குணமற்று பல குற்றம் உடையவனாய் இருப்பின் அவன் துணையில்லாதவன் ஆவான்.நற்குணமில்லாத மனிதர்களாகவும் வாழ்வினில் குற்றச்செயல்களுக்கு உடன்பட்டவர்களாகவும் மனிதர்கள் வாழ்ந்தால் அவர்களுக்கு சமுதாயத்தின் உதவி இருக்காது அதனால் எதிரிகள் நிறைய இருப்பார்கள் என்றும் வீழ்த்த காத்தருப்பார்கள் எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம் .மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

87/867:பகை மாட்சி திருக்குறள்

Image
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை.அருகாமையில் வசித்து தனக்கே தீமை செய்பவனை ஏதாவது கொடுத்தாவது பகை கொள்ளவேண்டும்.உறவாடிக்கொண்டே தீங்குகளை செய்பவர்களை எதை கொடுத்தும் அவர்களின் உறவிருந்து விடுவித்துக்கொள்ளவேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம் .மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

87/866:பகை மாட்சி திருக்குறள்-

Image
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும்.உண்மையறியாத சினத்தான் பெருகாமுகன் இவர்களது பகைமை விரும்பி வெல்லப்படும்.எதையும் தெரிந்து கொள்ளாது கோபப்பட்டு சினம் கொள்ளுபவர்களையும் பெண்களை விரும்பி காமத்தால் அறிவிளப்பவர்களுடைய விரோதம் சமுகத்தால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்படுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

87/865:பகை மாட்சி திருக்குறள்

Image
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க்கு இனிது.செயலைச் செய்ய வழிகளை ஆராயமல் தவறு செய்பவனாய் வரக்கூடிய பழிகளை கருதாதவனாய் நற்குணமற்றவனாய் உள்ளவன் பகைவரால் எளிதாக வெல்லப்படுவான்.சிறந்த முறையில் படிக்காதவன் நீதி நூல்களை அறியாதவன் செய்யும் செயல்களின் வரும் பாவங்களை பெரிதாக கருத்தில் கொள்ளாதவன் நற்சிந்தனையும் நற்குணங்களுமில்லாதவனை எதிரிகள் சுலபமாக வெண்றுவிடுவார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

87/864:பகை மாட்சி திருக்குறள்

Image
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் யாங்காணும் யார்க்கும் எளிது.சினம் நீங்காதவனை அடக்கமற்றவனை வெல்லுதல் எப்பொழுதும் எளிது. எப்பொழுதும் கோபத்தில் இருப்பவர்கள் அடகமில்லாதவர்கள் அவர்களை எப்பொழுதும் எவராலும் வெல்லுதல் முடியுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

87/863:பகை மாட்சி திருக்குறள்

Image
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு.அஞ்சுவதற்கு அஞ்சாதவன் அறிய வேண்டியதை அறியாதவன் பிறரோடு ஒத்து நடவாதவன் ஈகை குணமற்றவன் பகைவரால் வெல்ல எளியவன் ஆவான்.மனிதர்களின் குணங்களில் அஞ்சும்குணம் அஞ்சாக்குணம் என்று இரண்டுவிதமான குணங்கள் உண்டு அஞ்சுவதுக்கு அஞ்சவேண்டியதும் அறியவேண்டியதை அறிந்து கொள்வதும் பிறரோடு ஒத்துப்போவதும் மனிதர்களின் இயல்பு அதையே திறனான குணமுடைய மனிதர்களின் வாழ்க்கை சிறப்படைய வழி அமைக்கும் அத்திறன் இல்லாதார் பகைவரால் எளிதாக வெல்லகூடியவர்களென எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . எழுதுகோல் முனையில் பாலாஜி பாலசுப்பிரமணியம் .கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம் .மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.