87/863:பகை மாட்சி திருக்குறள்


அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு.அஞ்சுவதற்கு அஞ்சாதவன் அறிய வேண்டியதை அறியாதவன் பிறரோடு ஒத்து நடவாதவன் ஈகை குணமற்றவன் பகைவரால் வெல்ல எளியவன் ஆவான்.மனிதர்களின் குணங்களில் அஞ்சும்குணம் அஞ்சாக்குணம் என்று இரண்டுவிதமான குணங்கள் உண்டு அஞ்சுவதுக்கு அஞ்சவேண்டியதும் அறியவேண்டியதை அறிந்து கொள்வதும் பிறரோடு ஒத்துப்போவதும் மனிதர்களின் இயல்பு அதையே திறனான குணமுடைய மனிதர்களின் வாழ்க்கை சிறப்படைய வழி அமைக்கும் அத்திறன் இல்லாதார் பகைவரால் எளிதாக வெல்லகூடியவர்களென எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . எழுதுகோல் முனையில் பாலாஜி பாலசுப்பிரமணியம் .கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம் .மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்