Posts

109/1082:திருக்குறள்-இன்பத்துப்பால் தகையணங்குறுத்தல்

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்னது உடைத்து. அழகிய பெண் என்னைப் பார்த்தால் தாக்கவரும் ஒரு தெய்வப்பெண் படை கொண்டு வந்தாற் போன்றுள்ளது.அழகான பெண்ணின் மான்விழிகளின் பார்வைக்கு எதிராக பார்த்த போது அதேநேரத்தில் அவளின் மான்விழிப்பார்வையும் என்னை சேனையின் பலம் கொண்டு   பார்ப்பதுபோலிருந்தது என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு. 

109/1081:திருக்குறள்-இன்பத்துப்பால் தகையணங்குறுத்தல்

Image
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.கணத்த காதணி அணிந்திருக்குமிவள் தெய்வப்பெண்ணே  மயிலோ மனிதப்பெண்ணே இவள் இன்னவளென அறியாது என்னெஞ்சம் மயங்குகிறது.தமிழ்ப்பெண்ணே உனது காதோரம் டோலாக்கு கண்டு நீ தெய்வீகபெண்நோ மெல்லின இடையழகுடைய  பெண்நோ மயில் நடையழகு கொண்ட சகியோ இவள் என்னவளழோ என்று சிந்தனைக்கு எட்டாத தமிழ்ப்பெண்நோ என எண்ணுகின்ற மயக்கத்தில் வாழ்ந்திருக்கும் இதயங்கள் இந்ந பூமியிலேயென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு. 

108/1080:திருக்குறள்-கயமை

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து.கயவர்க்கு ஒரு துன்பம் வந்தபோது தம்மை விரைந்து விற்பர் வேறு எதற்குப் பயன்படுவர்? தீயவர்களுக்கு கஸ்ட துன்பங்கள் வருமாயின் அவர்கள் தம்மை விலையாக விற்று தமது நன்மைகளை அடைய தயங்கமாட்டார்களென எடுத்துரைக்கின்றது . தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கம் பாலாஜி பாலசுப்ரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

108/1079:திருக்குறள்-கயமை

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ்.கீழ்மக்கள் பிறர் நன்றாக உடுப்பதையும் உண்பதையும் கண்டால் அவர் மீது குற்றம் காண்பார். சிறந்த மனமில்லாத மனிதர்கள் உண்பதையும் உடுப்பதையும் சிறப்பாக வாழ்பவர்களை கண்டால் எப்படியாவது அவர்கள்மீது குறை குற்றங்களை கண்டுபிடிக்கமுயல்வார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

108/1078:திருக்குறள்-கயமை

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்.பிறர் குறைகளை சொன்ன அளவிலேயே மேன்மக்கள் உதவி பயன்படுவர் கீழ்மக்கள் கரும்பை போல பிழிந்தால்தான் பயன்படுவர்.மனிதர்கள் தங்களின் வாழ்வியல் கஸ்டங்களை வசதி உள்ள மக்களிடம் சென்று எடுத்துரைத்தால் அந்த வசதிகொண்டமக்கள் உதவி செய்து ஏழைகளின் வாழ்வினை உயர்த்திவிடுவார்கள் ஆனால் அதே உதவிட மனமில்லாத கீழ்த்தனமான மக்களை கரும்பை பிழிவதுபோல பிழிந்தால்தான் கொஞ்சமாவது உதவக்கூடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

108/1077:திருக்குறள்-கயமை

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கைய ரல்லா தவர்க்கு.கீழ்மக்கள் தம் கன்னத்தை உடைக்க கையை ஒங்குவார்களே தவிர உண்டு கழுவிய கையை உதரார்.கீழ்தரப்பட்ட மக்கள் சண்டைக்காக முன்னுக்கு நிற்ப்பார்கள் ஆனால் சாப்பிட்ட கையை காகம் துரத்தக்கூட பயன்படுத்தமாட்டார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை. 

108/1076:திருக்குறள்-கயமை

அறைபறை அன்னர் கயவர்தம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். நாம் அறிந்த இரகசியங்களை புறர்க்கும் கூறுதலால் கீழ்மக்கள் அடிக்கப்படும் பறையப் போன்றவர்கள்.மனிதர்கள் அறிகின்ற இரகசியமான விடயங்களை இரகசிமாக வைத்துக்கொள்ளவதே மனிதவாழ்வுக்கு சிறந்தது இரகசியத்தை அனைவரிடத்திலும் சொல்லித்திரிவது என்பது கீழ்தனமான மக்களால் சாற்றப்படும் பறைக்கு ஒப்பானதென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.