Posts

110/1095:திருக்குறள்-குறிப்பறிதல்

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும்.இவள் என்னை நேரே பார்க்கவில்லையேயன்றி ஒரு கண் சுருக்கி பார்த்து மகிழ்வாள்.பெண்கள் நேராக ஆண்களை பார்க்கமாட்டார்களே தவிர ஆனால் கண்களால் உண்டு மனதால் நினைத்து மகிழ்வார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜிபாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

110/1094:திருக்குறள்-குறிப்பறிதல்

யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி  மெல்ல நகும்.நான் பார்க்கும்போது அவள் நிலம் நோக்கி  நான் பார்க்காதபோது என்னை  பார்த்து புன்சிரிப்பு செய்வாள்.ஆண்கள் நோக்கும்போது நோக்காத பெண்கள் தலையைகுனித்து நிலம்நோக்கி நானத்தின் பொன்முறுவல் காட்டி ஆண்கள் காணதாபோது அவர்களை கண்டு புன்னகை தரும் தமிழ்ப்பெண்களின் தன்மை தமிழ் கலை கலாச்சாரத்தின் வாழ்வியல் உண்மையென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

110/1093:திருக்குறள்-குறிப்பறிதல்

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவன் யாப்பினுள் அட்டிய நீர்.இவள் என்னை கண்டு தலைகுனிந்தாள்  அச்செயல் எங்கள் அன்பாகிய பயிரை வளர்க்க பாய்ச்சிய நீராகும்.பெண்கள் ஆண்களை நோக்கி தலை குனித்தால் அச்செயல் ஆண்கள்மீது அன்பெனும் பயிரை வளர்த்து நட்புக்காக  திறந்து விட்ட  நீரைப்போல ஆகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு. 

110/1092:திருக்குறள்-குறிப்பறிதல்

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது. எனக்குத் தெரியாமல் என்னும் பார்க்கும் இவள் கண்ணில் சிறு பார்வை என் விருப்பத்தில் பாதி அன்று அதைவிட பெரியது. பெண்கள் ஆண்களுக்கு தெரியாது கருவிழிகொண்டு களவாடும் அந்த கள்ளப்பார்வை காம இன்பத்தில் ஒரு பகுதி அளவுக்கும் மேலாதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு. 

110/1091:திருக்குறள்-குறிப்பறிதல்

Image
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்தநோய் மருந்து.இவளுடைய மையுண்ட கண்களுக்கு இரண்டு வகைப்பார்வை உண்டு ஒன்று நோய்தரும் மற்றொன்று அந்நோய் போக்கும் பார்வை.பெண்களின் மைபூசிய கண்களில் இரண்டு விதமான பார்வைகள் இருக்கின்றது ஒன்று காதல் நோயை வரவளைக்கூடிய பார்வை இன்நொன்று  அதே காதல்நோயை  அகற்றும் பார்வையென  எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு. 

109/1090:திருக்குறள்-இன்பத்துப்பால் தகையணங்குறுத்தல்

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று.உண்டவர்க்கு மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளளை போலல்லாது காமம் கண்டாரிடத்தும் மகிழ்ச்சி தரும்.மதுபானங்களை குடித்தால்தான் குடித்தவர்களுக்கு இன்பம் தரும் குடிபானங்களை போல் அல்ல காமத்துப்பால் பார்க்கும் பார்வையால் காதல் மலருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு. 

109/1089:திருக்குறள்-இன்பத்துப்பால் தகையணங்குறுத்தல்

பிணையோர் மடநோக்கும் நாணும் உடையாட்கு  அணிஎவனோ ஏதில தந்து.பெண்மான் போன்ற அழகிய அஞ்சும் பார்வையும் நாணத்தையும் உடைய இவளுக்கு வேறு அணிகள் பயன்ற்றது.அழகிய பெண்மான் போல அழகையும் எழில்கொஞ்சும் பார்வையும்  வெட்கத்தையும் கொண்டுள்ள பெண்ணுக்கு செயர்கையாக அணியும் ஆபரணங்கள் தேவையில்லையென   எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.