110/1094:திருக்குறள்-குறிப்பறிதல்

யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி  மெல்ல நகும்.நான் பார்க்கும்போது அவள் நிலம் நோக்கி  நான் பார்க்காதபோது என்னை  பார்த்து புன்சிரிப்பு செய்வாள்.ஆண்கள் நோக்கும்போது நோக்காத பெண்கள் தலையைகுனித்து நிலம்நோக்கி நானத்தின் பொன்முறுவல் காட்டி ஆண்கள் காணதாபோது அவர்களை கண்டு புன்னகை தரும் தமிழ்ப்பெண்களின் தன்மை தமிழ் கலை கலாச்சாரத்தின் வாழ்வியல் உண்மையென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

Comments