16/158:திருக்குறள்-பொறையுடைமை
திருக்குறள்:
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல். (குறள் 158 - அதிகாரம்: பொறையுடைமை)
பொருள்:
செருக்கினால் (ஆணவத்தினால்) தமக்குத் தீமை செய்தவர்களையும், தாம் தம்முடைய பொறுமையாகிய பெருந்தன்மையால் நன்மை செய்து வென்று விட வேண்டும்.
விரிவாக்கம்:
திமிரினாலும் ஆணவத்தினாலும் நமக்குத் தகாத செயல்களையும் தீமைகளையும் செய்தவர்களுக்கு, பதிலுக்குத் தீமை செய்யாமல் நல்வினைகளைச் செய்து, நமது பொறுமையாலும் பெருந்தன்மையாலும் அவர்களை வெல்ல வேண்டும். தீமைக்குத் தீமை செய்வதை விட, அன்பாலும் சகிப்புத்தன்மையாலும் எதிரியையும் திருத்தி வெல்வதே உயர்ந்த பண்பு என்பதைத் திருவள்ளுவர் இக்குறளில் எடுத்துரைக்கிறார்.
---
English Translation:
Thirukkural:
Migudhiyaan Mikkavai Seydhaaraith Thaantham
Thagudhiyaan Vendru Vidal.
Meaning:
Conquer those who, out of arrogance, have done you great wrong, through your own patience and noble dignity.
Explanation:
Thiruvalluvar teaches that true victory over arrogant wrongdoers comes not through retaliation, but through magnanimity and forbearance. By responding to insolence and harm with goodness and composed dignity, one rises above the conflict and wins morally.
---
பொன்மொழி:
"ஆணவத்தால் தீமை செய்தவர்களுக்கும் நன்மையைச் செய்து, நம் பொறுமையாலும் பெருந்தன்மையாலும் அவர்களை வெல்ல வேண்டும்."
தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்
— எழுதுகோல் முனையில் பாலாஜி பாலசுப்பிரமணியம்.
"அழிவது நாமாக இருந்தாலும், செழிப்பது தமிழ்மொழியாகட்டும்."

Comments