17/162:திருக்குறள்-அழுக்காறாமை


திருக்குறள்:
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையாம் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின். (குறள் 162 - அதிகாரம்: அழுக்காறாமை)

பொருள்:
ஒருவன் யாரிடத்திலும் பொறாமைப்படாத உயர்ந்த பண்பினைப் பெறுவானேயானால், அவன் உலகில் பெறுவதற்குரிய சிறந்த பேறுகளுள் (செல்வங்களுள்) அதற்கு இணையான சிறந்தது வேறொன்றும் இல்லை.

விரிவாக்கம்:
மனிதர்களின் வாழ்வியல் சிந்தனைக்குள் பொறாமையற்றவர்களாக வாழ்வதே சிறந்த வாழ்வுக்குரிய அடையாளமாகும். அப்படி மற்றவர்களின் உயர்வையும் வளர்ச்சியையும் கண்டு பொறாமைப்படாமல் வாழ்கின்ற வாழ்க்கையிலேயே மனிதர்களுக்குச் சிறப்பான வாழ்வியல் சிந்தனையும், ஒப்பற்ற மனநிறைவும் கிடைக்கும் என்பதைத் திருவள்ளுவர் இக்குறளில் எடுத்துரைக்கிறார்.

---

English Translation:

Thirukkural:
Vizhuppaetrin Afthoppadhu Illaiyaam Maattum
Azhukkaatrin Anmai Perin.

Meaning:
Among all the supreme blessings one can attain, there is none equal to possessing a heart free from envy toward anyone.

Explanation:
Thiruvalluvar declares that living without jealousy in our thoughts and daily outlook is the hallmark of a truly noble life. When a person cultivates a mind completely free from envy toward others, they attain an unmatched inner richness and the highest form of human grace.

---

பொன்மொழி:
"யாரிடத்திலும் பொறாமைப்படாத உயர்ந்த பண்பைப் பெறுவதே, உலகில் ஒருவன் பெறக்கூடிய மிகச் சிறந்த பேறாகும்."

தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்
— எழுதுகோல் முனையில் பாலாஜி பாலசுப்பிரமணியம்.

"அழிவது நாமாக இருந்தாலும், செழிப்பது தமிழ்மொழியாகட்டும்."
"எங்கும் தமிழ், எதிலும் தமிழ், என்றும் வாழும் உலகில் தமிழ்."
"உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு, திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு."

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்