69/690:திருக்குறள்-தூது
திருக்குறள்:
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்குத்
உறுதி பயப்பது ஆம் தூது. (குறள் 690 - அதிகாரம்: தூது)
பொருள்:
தனக்கு இறுதி நாசமே (மரணமே அல்லது அழிவே) உண்டானாலும் பரவாயில்லை, எஞ்சாமல் தன் அரசனுக்கு நன்மை தரக்கூடிய உறுதியானக் காரியத்தைச் செய்பவனே சிறந்த தூதன் ஆவான்.
விரிவாக்கம்:
ஒரு நாட்டின் சார்பாகப் பிற நாட்டு மன்னனிடம் தூது செல்லும் தூதுவன் எத்தகைய ஆபத்தான சூழ்நிலையிலும் தயங்கக் கூடாது. தான் பேசும் வார்த்தைகளால் தனக்குத் தீமை விளையலாம் அல்லது தன் உயிருக்கே ஆபத்து வரலாம் என்று அஞ்சாமல், தான் சார்ந்திருக்கும் நாட்டிற்கும் அரசனுக்கும் எது நன்மை பயக்குமோ அதனைத் துணிச்சலாக எடுத்துரைக்க வேண்டும். சொந்த நலனைக் காட்டிலும் நாட்டின் நலனை முதன்மையாகக் கருதிச் செயல்படுவதே தூதுவனின் மிக உயர்ந்த கடமையாகும் என்று வள்ளுவர் விளக்குகிறார்.
English Translation:
Thirukkural:
Iruthi Payappinum Enjaathu Iravaṟku
Uruthi Payappathu Aam Thoothu.
Meaning:
He is an ambassador who, even if it brings ruin to himself, unflinchingly speaks what is beneficial to his king.
Explanation:
Valluvar highlights the supreme dedication required of an envoy: even at the risk of personal peril or destruction, a true ambassador must never hold back truth and must fearlessly advocate what is advantageous to his sovereign and country.
— தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.
[God to man is Gita; Man to God is Thiruvasagam; Man to man is Thirukkural].
"தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை; தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை."

Comments