69/686:திருக்குறள்-தூது
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்கது அறிவதாம் தூது. கற்று அச்சாது எடுத்துச் சொல்லிச் சமயத்திற்கு ஏற்றதை அறிந்தவனே தூதுவன்.படித்தவர்களாகவும் எதிரிகளின் பயமுறுத்தல்களுக்கும் அவர்களின் பார்வைகளுக்கும் பயப்பிடாதவர்களாகவும் எதிரிகளின் உள்ளத்தில் நன்றாக பதியும் படி எடுத்துரைக்கும் வல்லமை பெற்றவர்களாகவும் தகுந்த நேரத்தில் புரியவேண்டியவைகளை புரிந்துகொள்பவர்களே தூதுவர்களென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

Comments