69/688:திருக்குறள்-தூது
திருக்குறள்:
தூய்மை, துணைமை, துணிவு உடைமை, இம்மூன்றின்
எண்ணி உரைப்பான் தலை. (குறள் 688 - அதிகாரம்: தூது)
பொருள்:
உள்ளத் தூய்மை, உடனிருக்கும் துணையை நாடிச் செல்லும் ஆற்றல், மனத்துணிவு ஆகிய இந்த மூன்று பண்புகளையும் நன்கு ஆராய்ந்து, தூதுக் காரியத்தை நிறைவு செய்பவனே சிறந்த தூதுவன் ஆவான்.
விரிவாக்கம்:
ஒரு நாட்டின் சார்பாகத் தூது செல்லும் தூதுவனுக்குச் சில இன்றியமையாத தகுதிகள் தேவைப்படுகின்றன. முதலாவதாக, எத்தகைய சூழ்நிலையிலும் லஞ்சம் பெறாமலும், பேராசை கொள்ளாமலும் வாழும் மனத் தூய்மை இருக்க வேண்டும். இரண்டாவதாக, ஆபத்தான தருக்களில் உதவுவதற்குரிய நல்ல துணையும், சூழ்நிலையைச் சமாளிக்கும் ஆற்றலும் இருக்க வேண்டும். மூன்றாவதாக, பகைவர் நடுவே அச்சமின்றிப் பேசக்கூடிய அஞ்சா நெஞ்சம் அல்லது மனத்துணிவு இருக்க வேண்டும். இந்த மூன்று சிறப்புகளையும் ஒருங்கே பெற்று, தன் நாட்டின் நலனுக்காகத் தெளிவாகப் பேசி முடிப்பவனே தலைசிறந்த தூதுவன் என்று வள்ளுவர் பெருமான் எடுத்துரைக்கிறார்.
English Translation:
Thirukkural:
Thooymai, Thunaimai, Thunivu Udaimai, Immoonrin
Enni Uraippaan Thalai.
Meaning:
He is the foremost ambassador who, possessing purity, support, and courage, delivers his message with careful consideration of these three qualities.
Explanation:
Valluvar states that the best envoy is one who embodies moral purity, has reliable backup or resources, and possesses unshakeable courage, carefully leveraging these traits to successfully execute his diplomatic mission.
— தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.
[God to man is Gita; Man to God is Thiruvasagam; Man to man is Thirukkural].
"உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்."

Comments