80/798:திருக்குறள்-நட்பாராய்தல்


திருக்குறள்:

உள்ளற்க உள்ளம் சிறுகுவ, கொள்ளற்க

அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. (குறள் 798 - அதிகாரம்: நட்பு)

பொருள்:

நமது மனம் பெருமை குன்றிச் சிறுமை அடையும் செயல்களை ஒருபோதும் நினைக்க வேண்டாம்; அதுபோலவே, துன்பம் வந்த காலத்தில் கைவிட்டு விலகிச் செல்வோரின் நட்பையும் கொள்ள வேண்டாம்.

விரிவாக்கம்:

வாழ்க்கையில் மனிதர்கள் தன்மானத்தை இழக்க நேரிடும் இழிவான செயல்களை மனதாலும் நினைக்கக் கூடாது. அதேபோன்று, நமக்கு ஒரு சோதனையோ அல்லது பேரிடரோ வரும்போது கைகொடுத்து உதவாமல், நடுவழியில் நம்மைத் தனித்துவிட்டு ஓடிப்போகும் சுயநலக்காரர்களின் நட்பை எக்காலத்திலும் எக்காரணம் கொண்டும் கொள்ளக்கூடாது என்று வள்ளுவர் மிக வன்மையாக எச்சரிக்கிறார்.

English Translation:

Thirukkural:

Ullarka Ullam Siruguva, Kollarka

Allakkan Aatraruppaar Natpu.

Meaning:

Never entertain thoughts that make the mind diminish in dignity; and never cultivate the friendship of those who abandon you in the time of adversity.

Explanation:

Valluvar advises avoiding shameful thoughts that lower one's self-esteem and strictly warning against forming or maintaining bonds with unreliable individuals who desert you when you need them most during times of suffering.

— தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.

[God to man is Gita; Man to God is Thiruvasagam; Man to man is Thirukkural].

"தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை; தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை."

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்