80/795:திருக்குறள்-நட்பாராய்தல்


திருக்குறள்:

அழச்சொல்லி அல்லது இடிந்து வழக்கறிய

வல்லார் நட்பு ஆய்ந்து கொளல். (குறள் 795 - அதிகாரம்: நட்பு)

பொருள்:

நாம் தவறு செய்யும் போது மனம் வருந்தும்படி கடிந்துரைத்து, தீய வழியிலிருந்து விலக்கி, நல்வழியில் செலுத்த வல்லவர்களின் நட்பை ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

விரிவாக்கம்:

உண்மையான நண்பர் என்பவர் நம்மை எப்போதும் புகழ்ந்து பேசுபவர் அல்ல; மாறாக, நாம் அறியாமையால் தவறு செய்யும்போது அதனைச் சுட்டிக்காட்டி, தேவைப்பட்டால் கடிந்து திருத்தி நம்மை நல்வழிப்படுத்துபவரே ஆவர். அப்படிப்பட்ட நல்ல குணமும், சரியான நெறியை உணர்த்தும் வல்லமையும் கொண்டோரைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் நட்பு கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் அறிவுறுத்துகிறார்.

English Translation:

Thirukkural:

Azhachcolli Allathu Idinthu Vazhakariya

Vallaar Natpu Aaynthu Kolal.

Meaning:

Seek and cultivate the friendship of those who have the ability to reprove your faults with stern words that cause grief, turn you away from evil, and guide you in the path of righteousness.

Explanation:

Valluvar emphasizes that a true friend is one who corrects your mistakes firmly—even if it brings temporary pain or sorrow—to steer you clear of wrong paths and guide you toward moral integrity.

— தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.

[God to man is Gita; Man to God is Thiruvasagam; Man to man is Thirukkural].

"தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை; தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை."

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்