80/800:திருக்குறள்-நட்பாராய்தல்
திருக்குறள்:
மருவுக மாசற்றார் கேண்மை; ஒன்றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு. (குறள் 800 - அதிகாரம்: நட்பு)
பொருள்:
குற்றமில்லாத நல்லோரின் நட்பைப் பொருந்திப் பழகுக; தகுதி அற்றவர்களின் நட்பையோ, எதையாவது ஒரு பொருளைக் கொடுத்தாவது (விலை கொடுத்தாவது) விட்டுவிலகுக.
விரிவாக்கம்:
வாழ்க்கையில் நாம் சேரும் நட்பு நமது எதிர்காலத்தைத் நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, மாசு மருவற்ற உயர்ந்த பண்பாளர்களுடன் மட்டுமே நட்பு கொள்ள வேண்டும். ஒருவேளை தகுதியற்ற தீயவர்களின் நட்பு ஏற்பட்டுவிட்டால், அவர்களை விட்டு விலகுவதற்காகத் நம்மிடம் உள்ள பொருளைக் கொடுத்தேனும் அந்தத் தொடர்பைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் எச்சரிக்கிறார்.
English Translation:
Thirukkural:
Maruvuga Maasattaar Kenmai; Ondreethum
Oruvuga Oppilaar Natpu.
Meaning:
Cleave to the friendship of the stainless; renounce the friendship of the unworthy, even if you have to give them something to get away.
Explanation:
Valluvar advises seeking and cherishing the companionship of pure-hearted and noble souls, while discarding the association of base and incompatible individuals, even if it requires offering gifts or wealth to sever ties cleanly.
— Daily a Kural, Meaning, and Explanation. Balaji Balasubramaniam.
[God to man is Gita; Man to God is Thiruvasagam; Man to man is Thirukkural].
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

Comments