Posts

22/212:திருக்குறள்-ஒப்புரவறிதல்

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு.மிக்க முயற்சித்து சேர்த்தப் பொருள் அனைத்தும் உரியவர்க்கு உதவி செய்வதற்கே.உழவர்களின் மிக சிறந்த முயற்சியால் வேளாண்மை செய்து சேர்கப்பட்ட அனைத்தும் அந்த உழவு நிலங்களில் வேர்வை சிந்தி வேலை செய்தவர்களின் வாழ்வியலுக்கு உதவி உழவர்களின் வாழ்வை வளம்படுத்தவே என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும். 

22/211:திருக்குறள்-ஒப்புரவறிதல்

கைம்மாறும் வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என் ஆற்றுங் கொல்லோ உலகு.வான்மழைத் தரும் மேகங்கள் கைம்மாறு கருதுவதில்லை அது போன்றவர்கள் செய்யும் உதவிக்கும் கைம்மாறு கருதுவதில்லை.இயற்கையாக வானம் பொழிகிறது அந்த வான்மழை பலனை எதிர்பார்பதில்லை அதேபோல மனிதர்களுக்கிடையே உதவுகின்ற உதவிகளுக்கு பலனை கைமாற்றாக எதிர்பார்த்து உதவுவதில் எந்த நன்மையும் இல்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும் . 

21/210:திருக்குறள் -தீவினையச்சம்

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவிளை செய்யான் எனின்.ஒருவன் தீயவழிகளில் சென்று தீயசெயல்களைச் செய்யாதிருப்பின் அவரை துன்பம் வந்தடையாது.இந்ந உலகத்தில் மனிதர்களின் வாழ்வில் தீயவழிகளில் சென்று தீவினை புரியாது வாழ்ந்தால் வந்தால் துன்பம் மனிதர்களை வந்து சேராது தீவினைகளை புரிபவர்களுக்கு என்றும் துன்பம் தேடிவருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .  

21/209:திருக்குறள் -தீவினையச்சம்

தன்னைத்தான் காலனாயின் எனைத்தொன்றும் துன்னற்க் தீவினைப் பால்.ஒருவன் தன்னுடைய நலனை விரும்புவானாயின் எவ்வளவு சிறிய தீய செயலையும் பிறர்க்குச் செய்யாதிருக்கவேண்டும் மாந்தர்கள் தங்களைடைய நலனை கருத்தில் கொள்ளல்வேண்டுமென்றால் எப்படிப்பட்ட சிறிய தீவினைகளையும்  இன்நொருவருக்கு செய்யாதிருக்கவேண்டும் எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

21/208:திருக்குறள்-தீவினையச்சம்

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடி உறைந்தற்று. ஒருவன் நிழல் அவனைவிடாது தொடர்வதுபோல் பிறர்க்குச் செய்யும் தீமையால் உண்டாகும் கெடுதல் அவனை தொடர்ந்து அடியில் வந்து தாங்கும்.மனிதர்களே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மற்றவர்களுக்கு தீயதைச்செய்யாதீர்கள் அப்படி நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மற்றவர்களுக்கு தீங்குகளை இளைக்கும்போது உங்கள் நிழல் உங்களோடு சேர்ந்து வருவதுபோல நீங்கள் செய்தபாவங்களும் உங்களை தொடர்ந்து வந்து தாக்கும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம். 

21/207:திருக்குறள் தீவினையச்சம்

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும்.எத்தகைய பெரிய பகையை உடையவரும் அவற்றிலிருந்து தப்ப இயலும் ஆனால் தீயவையாகிய தீவினைப் பகை அவரை விடாது தொடர்ந்து கொல்லும்.இந்த உலகத்தில் மனிதர்களே நீங்கள் எப்பெரிய பகைகளையும் இளைத்திருக்கலாம் அதில் இருந்து தப்பி மீண்டும் ஒரு நல்ல வாழ்கையை காலத்தால் அமைத்துக்கொள்ளலாம் ஆனால் நீங்கள் அன்று புரிந்த தீயவையாகிய தீயசெயல்கள் வாழ்நாளில் உங்களை பின் தொடர்ந்து கொல்லுமெ எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் .பாலாஜீ பாலசுப்பிரமணியம் .

21/206:திருக்குறள்-தீவினையச்சம்

தீப்பால தான் பிறர் கண் செய்யற்க நோயப்பால தன்னை அடல் வேண்டா தான்.பிணி துன்பம் பாவங்கள் தம்மை நாடாதிருக்க வேண்டும் பவர்கள் பிறர்க்கை தீமை செய்யாதிருந்தல் வேண்டும்.  மனித வாழ்வினில் நோய்கள் பிணிகள் துன்பங்கள் துயரங்கள் பழிகள் பாவங்கள் தங்களை வந்து சேராமல் இருக்க வேண்டுமென்று வாழ்வினில் வேண்டிக்கொண்டால் மற்றவர்களுக்கு தீங்குகளை செய்யாது வாழ்தல் வாழ்வுக்கு சிறப்பளிக்குமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.