21/207:திருக்குறள் தீவினையச்சம்


திருக்குறள்:

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை

வீயாது பின்சென்று அடும். (குறள் 207 - அதிகாரம்: தீவினையச்சம்)


பொருள்:

எத்தகைய பெரிய பகைவர்களிடம் சிக்கிக்கொண்டவர்களும் ஒருவேளை தப்பிப் பிழைத்துவிடலாம்; ஆனால், தான் செய்த தீய செயலாகிய பகை ஒருவனை விடாமல் பின்தொடர்ந்துசென்று அழித்துவிடும்.


விரிவாக்கம்:

உலகத்தில் நமக்கு ஏற்படுகின்ற வெளிப்புறப் பகைவர்களிடமிருந்து தப்பிப்பதற்குப் பலவழிகள் இருக்கலாம்; காலப்போக்கில் சமாதானம் செய்து கொள்ளலாம் அல்லது இடத்தைவிட்டு விலகிச் சென்று உயிர் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால், ஒரு மனிதன் தன்மனசாட்சிக்கு விரோதமாகப் பிறருக்குச் செய்த தீய செயல்கள் ('வினைப்பகை') அவனுக்குள்ளேயே உருவான மிகக் கொடிய பகையாகும். அந்தத் தீவினைப்பகையிலிருந்து உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் தப்பிக்கவே முடியாது; அது அவனைவாழ்நாள் முழுவதும் விடாமல் பின்தொடர்ந்து சென்று நிச்சயம் அழிக்கும் என்பதைவள்ளுவர் எச்சரிக்கையாக எடுத்துரைக்கிறார்.


---


English Translation:


Thirukkural:

Enaippagai Yutraarum Uyvar Vinaippagai

Veeyaadhu Pinsendru Adum.


Meaning:

One may somehow escape from any powerful external enemy, but the enmity of one's own evil deeds will relentlessly pursue and destroy them.


Explanation:

Thiruvalluvar contrasts external enemies with the internal consequence of wrongdoing. While it is possible to evade, negotiate with, or survive worldly adversaries, the karma of one's own evil actions is an inescapable foe that follows the wrongdoer until it brings about their ultimate downfall.


---


பொன்மொழி:

"வெளிப் பகைவரிடமிருந்து தப்பிக்கலாம்; ஆனால் நாம் செய்த தீவினைப் பகையிடமிருந்துஒருபோதும் தப்பிக்க முடியாது."


தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்

— எழுதுகோல் முனையில் பாலாஜி பாலசுப்பிரமணியம்.


"அழிவது நாமாக இருந்தாலும், செழிப்பது தமிழ்மொழியாகட்டும்."

"எங்கும் தமிழ், எதிலும் தமிழ், என்றும் வாழும் உலகில் தமிழ்."

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்