21/210:திருக்குறள் -தீவினையச்சம்


திருக்குறள்:

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்

தீவினை செய்யான் எனின். (குறள் 210 - அதிகாரம்: தீவினையச்சம்)


பொருள்:

ஒருவன் நல்வழியிலிருந்து விலகிச் சென்று பிறருக்குத் தீய செயல்களைச் செய்யாமல்இருப்பானானால், அவனை எந்தத் துன்பமும் (கேடும்) வந்து அடையாது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.


விரிவாக்கம்:

வாழ்க்கையில் துன்பங்களும் துயரங்களும் ஏன் வருகின்றன என்பதற்கான அடிப்படைக்காரணத்தைத் திருவள்ளுவர் இக்குறளில் மிகத் தெளிவாக விளக்குகிறார். அறநெறியாகியநேர்வழியிலிருந்து விலகி, குறுக்கு வழிகளில் சென்று பிறருக்குத் தீங்கு விளைவிக்கும்செயல்களைச் செய்பவர்களைத் துன்பம் நிச்சயம் தேடி வரும். மாறாக, எந்தச்சூழ்நிலையிலும் தீய வழிகளில் செல்லாமல், பிறருக்குத் தீங்கு நினைக்காமலும்செய்யாமலும் வாழ்கின்ற மனிதர்களை எத்தகைய அழிவும் துன்பமும் நெருங்காது; அவர்கள்என்றும் பாதுகாப்பாக வாழ்வார்கள் என்பதை வள்ளுவர் உறுதியாக எடுத்துரைக்கிறார்.


---


English Translation:


Thirukkural:

Arungaedan Enbadhu Ariga Marungodith

Theevinai Seyyaan Enin.


Meaning:

Know for certain that a person is free from ruin if they do not stray from the right path to commit evil deeds.


Explanation:

Thiruvalluvar clearly points out the root cause of human suffering and downfall. Misfortune inevitably follows those who deviate from righteousness to inflict harm on others. Conversely, anyone who refrains from evil actions and walks the path of integrity remains protected from ruin and lives in lasting peace.


---


பொன்மொழி:

"தீய வழியில் செல்லாதவரை, துன்பம் ஒருபோதும் நெருங்காது."


தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்

— எழுதுகோல் முனையில் பாலாஜி பாலசுப்பிரமணியம்.


"அழிவது நாமாக இருந்தாலும், செழிப்பது தமிழ்மொழியாகட்டும்."

"எங்கும் தமிழ், எதிலும் தமிழ், என்றும் வாழும் உலகில் தமிழ்."

"உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு, திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு."

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்