Posts

52/518:திருக்குறள்-தெரிந்து வினையாடல்

வினைக்குரிமை நாடி பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல்.ஒருவன் ஒரு செயலுக்கு ஏற்றவனாவான் என ஆராய்ந்து பின்னர் அச்செயலுக்குரிய்யவானாக அமர்த்தல் வேண்டும்.இந்த மனிதர்கள் இந்த செயலுக்கு ஏற்றவர்களா என அறிந்தே அந்த செயலுக்கு அமர்த்தவேண்டுமென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

52/517:திருக்குறள்-தெரிந்து வினையாடல்

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்த்து அதனை அவன் கண் விடல்.இச்செயல் இக்காரணத்தால் முடிக்க வல்லவன் இவன் என்று அவனிடம் அச்செயலை விடவேண்டும். இந்த செயலை யாரால் நிறைவேற்ற முடியுமோ அவர்களையே அதை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டுமென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

52/516:திருக்குறள்-தெரிந்து வினையாடல்

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல்.செயல்புரிபவன் தன்மை செயலின் இயலாமை ஆராய்ந்து அறிந்து காலத்திற்கேற்ப செய்தல் வேண்டும்.எந்த செயல்களையும் செய்யக்கூடியவர்களின் தன்மையை அறிந்து அவர்கள் அதை செய்வார்களா இல்லையா என புரிந்து கொண்டு சிறந்த நேரத்தை அறிந்து செயல்ப்படவேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

52/515:திருக்குறள்-தெரிந்து வினையாடால்

அறந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறதானென்று ஏவற்பாற்றன்று.செய்யும் முறையறிந்து செயலாற்ற வல்லவனைத் தவிர வேண்டியவனென்று மற்றொருவனை செயலாற்ற ஏவுதல் ஆகாது. செய்ய வேண்டிய விடயங்கள் என்னவென்று தெரிந்தவர்களையே செய்யவேண்டிய காரியங்களுக்கு அமர்த்த வேண்டும் அதை தவிர்த்து வல்லமையில்லாதவர்களை அமர்த்துதல் ஆகாது என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

52/514:திருக்குறள்- தெரிந்து வினையாடல்

எனை வகையான் தேறியக் கண்ணும் வினை வகையான் வேறாகும் மாந்தர் பலர் . எல்லா வகைகளையும் ஆராய்ந்து அறிந்து வேறுபாடான செயலைச் செய்யும்போது  அச்செயலின் பொருட்டு வேறுபடுகின்ற மனிதர்கள் பலர்.எந்த வகையான செயல்களை செய்ய தொடங்கினாலும் அச் செயல்களில் வேறுபாடான செயல்களைப்புரிந்தால் அந்த செயல்கள் மூலமாக வேறு படுகின்ற வித்தியாசமான பல மனிதர்களை பல கோணங்களில் பார்க்கலாம் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு  பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

52/513:திருக்குறள்- தெரிந்து வினையாடல்

அப்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு.அன்பு அறிவு அஞ்சாமை ஆசையின்மை இந்நான்கு குணங்களையுடையனை அரசன் அறிந்து கொள்ளவேண்டும்.அன்பும் அறிவும் பயப்படாத நெஞ்சையும் ஆசைகள் இல்லாத குணங்களை கொண்ட மனிதர்களை அரசாளும் மன்னன் அறிந்திருக்கவேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.தாய்மொழியை போற்றீ வீழ்ந்த நாடுமில்லை தாய்மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

52/512:திருக்குறள்-தெரிந்து வினையாடல்

வாரி பெருக்கி வளப்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. வருவாயைப் பெருக்கி  வளத்தைப் பெருக்கி இவற்றிற்கு நேரும் தடைகளை ஆராய்ந்து நீக்க வல்லவன் அரசச் செயலுக்குத் தகுந்தவன்.வருமானம்தை பெருக செய்து வளங்களை பெருக செய்து அதனுள் இருக்கின்ற தடைகளை அறிந்து இடையூறுகள் இல்லாமல் செய்பவர்களே அரசாங்கத்தின் மக்கள் பணிக்கு சேர்க்க கூடியவர்களேன எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .