Posts

58/580:திருக்குறள்-கண்ணோட்டம்

Image
பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்.அனைவரும் விரும்பும் நாகரிகம் உடையவர் தம்முடன் பழகியவர் நஞ்சை இடக்கண்டு அதை உண்பவர் போலாவர்.எல்லாராலும் விரும்பி பழகக்கூடிய மனிதர்களிடம் பழகுபவர்கள் நஞ்சைக்கொடித்தாலும் நம்பிக்கையில் அமுதாய் நினைத்து உண்பவர்களாவார்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

58/579:திருக்குறள்-கண்ணோட்டம்

ஓறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பேற்றம் தலை.தண்டிக்கும் ஆற்றலிருப்பினும் இரக்கம் கொண்டு பொறுத்துக் கொள்ளும் பண்பே சிறந்தது. தண்டனைகளை கொடுக்கும் சிறப்பு மனிதர்களிடம் இருந்தாலும் அதை மிகவும் இரக்க குணத்துடன் பொறுத்துக்கொண்டு ஏற்றுக்கொள்ளும் பண்பே வாழ்வில் சிறப்பாகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

58/578:திருக்குறள்-கண்ணோட்டம்

கருமஞ் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ்வுலகு.காரியம் கெடாமல் இரக்கம் கொள்ள சிறந்தவர்க்கு வயப்பட்டது இவ்வுலகம். கடமையை சிதைக்காமல் கண்ணும் கருத்துமாக காப்பவர்களுக்கு இந்த உலகம். வசப்படுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

58/577:திருக்குறள்-கண்ணோட்டம்

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இம்மையும் இல். இரக்கமில்லாதவர்கள் கண்ணிருந்தும் பார்வையற்றவர் இரக்கமுடையவர்கள் கண்பார்வையுடைய வராவார்.கருணை உள்ளம் கொண்ட மனிதர்களே கண் உள்ள மனிதர்கள் அன்பு பாசம் கருணை இல்லாத மனிதர்கள் கண்ணிருந்தும் கண்ணில்லாதவர்களென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

58/576:திருக்குறள்-கண்ணோட்டம்

மண்ணோடியைந்த மரத்தனையர் கண்ணோடியைந்து கண்ணோடா தவர். கண்களிலிருந்தும் இரக்கமில்லாவர்  மண்ணோடிருந்து வளராத மரம் போன்றவர்.மனிதர்களுக்கு கண் இருந்தும் அன்பு பாசம் இரக்ககுணங்கள் இல்லாத மனிதர்கள் சமுதாயத்தில் சேர்ந்து வாழ்ந்தாலும் மண்ணிலிருந்தும் ஓங்கி வளராத மரத்தை போன்றவர்களே ஆவர்களென  எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

58/575:திருக்குறள்-கண்ணோட்டம்

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப்படும்.இரக்கம் கொண்ட பார்வையே கண்ணிற்கு நகை எனப்படும் இரக்க உணர்வில்லா கண் இரண்டும் புண் என்க.இரக்கம் உள்ளவர்களின் கண்களைத்தான்  கண்கள் என கருதலாம் அப்படி இல்லாத கண்களை சிறப்பான கண்கள் அல்ல என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

58/574:திருக்குறள்-கண்ணோட்டம்

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண். வெண்மளவு இரக்கம் காட்டா கண் முகத்தில் இருப்பது போல் காணப்படுவது ஏன்? சமூகத்தில் இரக்கம் காட்டாத கண்கள் முகத்தில் இருந்தாலும் அவைகள் இல்லாமல் இருப்பது போலவே சமூகத்துக்கு காட்சியளிக்குமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .