58/579:திருக்குறள்-கண்ணோட்டம்
திருக்குறள்:
ஒறுத்து ஆற்றும் பண்பினார் கண்ணும் கண் ஓடிப்
பொறுத்து ஆற்றும் பண்பே தலை. (குறள் 579 - அதிகாரம்: கண்ணோட்டம்)
பொருள்:
தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிக்கும் வலிமையும் அதிகாரமும் பெற்றிருந்த போதிலும், அவர் மீது இரக்கம் கொண்டு (கண்ணோட்டம் செலுத்தி) அத்தவனைப் பொறுத்துக் கொள்ளும் பண்பே மிக உயர்ந்த குணமும் சிறப்பும் ஆகும்.
விரிவாக்கம்:
ஒருவனுக்குத் தண்டனை கொடுக்கும் அதிகாரம் கையில் இருக்கும் போது, அந்த அதிகாரத்தைப் பயன்படுத்திப் பழிவாங்குவது எளிது. ஆனால், தண்டிக்கக்கூடிய வல்லமை இருந்தும், தவறு செய்தவனின் நிலையை உணர்ந்து இரக்கத்தோடு அவனை மன்னித்துப் பொறுத்துக் கொள்வதே உண்மையான மாண்பாகும். பழிவாங்கும் குணத்தை விடப் பொறுமையோடும் தயவோடும் குற்றங்களை மன்னிப்பதே சான்றோர்களுக்குரிய கண்ணோட்டம் என்னும் தலையாய பண்பு என்பதை வள்ளுவர் இக்குறளில் மிக அழகாக எடுத்துரைக்கிறார்.
English Translation:
Thirukkural:
Oruththaatrum Panpinaar Kannum Kann Odip
Poruththaatrum Panpaetram Thalai.
Meaning:
Even towards those who deserve to be punished, exercising gracious forbearance and forgiving their faults is the highest virtue.
Explanation:
Valluvar emphasizes that true nobility lies not in exercising power to penalize wrongdoers, but in demonstrating grace and patience. Even when one holds the absolute authority to punish, showing mercy and choosing to forgive remains the supreme manifestation of benignity and moral strength.
— தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.
[God to man is Gita; Man to God is Thiruvasagam; Man to man is Thirukkural].
"உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்."

Comments