Posts

68/680:திருக்குறள்-வினை செயல்வகை

Image
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து.சிற்றரசர் குடிமக்கள் நடுங்குவது கண்டு தூதுவரின் பேரரசைப் பணிந்துக் கொள்வர்.மாநிலத்து மக்கள் பயந்து அச்சியே வாழ்வார்களானால்   அவர்களின் வாழ்வியல் துயரங்கள் காணும் ஆட்சியாளர்  மத்திய அரசுக்கு அடிபணிந்தே ஆட்சியை நடந்த விரும்புவார் அதனால் தூதுவரை மத்திய அரசுடன் பேச்சுகளை ஆரம்பிக்கும்படி பணித்துக்கொள்வாரேன எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

68/679:வினைசெயல்வகை திருக்குறள்

Image
நாட்டார்க்கு  நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை  ஒட்டிக் கொளல்.நண்பர்களுக்கு நன்மை செய்வதைக் காட்டிலும் பகைவரை நாடாதிருப்பவரை நட்பாக்கிக் கொள்ளுதல் நலம்.நட்பாளார்களுக்கு நன்மைகளை செய்து அவர்களை உயர்த்தி வைப்பதை விட எதிரிகளை சாராது இருப்பவர்களை நண்பர்களாக்கி  கொண்டால் அதுவே சிறந்ததாகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.தாய்மொழியை போற்றீ வீழ்ந்த நாடுமில்லை தாய்மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

68/678:திருக்குறள்-வினை செயல்வகை

Image
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று.யானையைக் கொண்டு யானையைப் பிடிப்பது போல் ஒரு செயலைக் கொண்டு மற்றொரு செயலை முடித்துக்கொள்ளவேண்டும்.செயல்களை தொடங்கும்போது  செயல்களிலிருந்து புதிய செயல்களை தொடங்கி  அதே செயல்களை கொண்டே  இன்னும் பல செயல்களை செய்து முடிக்கக்கூடியாதாக திறன் பெறவேண்டுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

68/677:திருக்குறள்-வினை செயல்வகை

Image
செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல்.ஒருவன் செயலைச் செய்பவன், செயலில் முறை நன்கறிந்தவனது கருத்தை அறிந்து செயல்பட வேண்டும்.மனிதர்கள் ஒரு செயலில் இறங்க முதலில் நான்கும் தெரிந்தவர்களிடம் கேட்டறிந்து கொண்டே அந்த செயலில் இறங்கவேண்டுமென  எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.

68/676:திருக்குறள்-வினை செயல்வகை

Image
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல். செயலின் முடிவும் அதன் தடைகளும் நீங்கினால் வரும் பெரும் பயனும் அறிந்து செய்யவேண்டும். எந்த செயல்களில் இறங்கின்றோமோ  அந்த செயல்களில் இடையில் வரும் தடைகளையும் அது முடிந்த பின் வரும் அதன் சிறந்த பயன்களையும் அறிந்து கொண்டே அந்த செயல் திட்டங்களில் ஈடுபடுவது சிறப்பாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை  நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.

68/675:திருக்குறள்-வினை செயல்வகை

Image
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் இருள் தீர எண்ணிச் செயல். ஒரு செயலின் பொருள் , கருவி காலம் , செயல்  இடம் என்ற ஐந்து ஆராய்ந்து நெளிந்து செய்க.ஏதாவது ஒன்றை தொடங்க முதல் என்ன பொருள் கருவிகள் எப்படி சிறந்த கால நேரமா    அதற்கு ஏற்ற இடமா என்ற இந்த ஐந்து விடயங்களையும் ஆராய்ந்து அறிந்து கொண்டே தெளிவான நிலையை அடைந்த பின்னரே செயலில் இறங்க வேண்டுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.

68:674:திருக்குறள்-வினை செயல்வகை

Image
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுவ்கால் தீயெச்சம் போலத் தெறும்.குறையுள்ள செயலும் அடக்கப்படாத பகையும் தீயைப்போல் வளர்ந்து அழிக்கும்.உலகத்தின் வாழ்வுதனில் எதைச் செய்தாலும்  அதை சரிவர செய்யவேண்டும்  அத்தோடு  பகைமை கொள்வதை அடக்கவேண்டும் அப்படி அடக்கப்பட விட்டால் அந்த பகை தீயைப்போல் வளர்ந்து மக்களை அழித்து விடும் அதனால் பகமையை தவிர்த்து நட்புறவான வாழ்வை வாழ்வதே மக்களுக்கு நன்மை தருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப்புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.