68:674:திருக்குறள்-வினை செயல்வகை
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுவ்கால் தீயெச்சம் போலத் தெறும்.குறையுள்ள செயலும் அடக்கப்படாத பகையும் தீயைப்போல் வளர்ந்து அழிக்கும்.உலகத்தின் வாழ்வுதனில் எதைச் செய்தாலும் அதை சரிவர செய்யவேண்டும் அத்தோடு பகைமை கொள்வதை அடக்கவேண்டும் அப்படி அடக்கப்பட விட்டால் அந்த பகை தீயைப்போல் வளர்ந்து மக்களை அழித்து விடும் அதனால் பகமையை தவிர்த்து நட்புறவான வாழ்வை வாழ்வதே மக்களுக்கு நன்மை தருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப்புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

Comments