Posts

76/760:திருக்குறள்-பொருள் செயல்வகை

Image
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றயார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு.ஒப்பற்ற நற்பொருளை திரளாகப் பெற்றவர்க்கு அறமும் இன்பமும் ஒருங்கே கிடைக்கும். அதிகமான செல்வங்களை வாழ்வினில் உழைத்து பெற்றவர்களுக்கு அறமும் இன்பமான வாழ்வும் சுகமான வாழ்வியல் செல்வாக்கும் ஒன்றாக வந்து சேருமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

76/759:திருக்குறள்-பொருள் செயல்வகை

Image
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரியது இல்.எதிரியின் கர்வத்தை அழிக்கும் கருவி செல்வம் போன்று வேறில்லை எனவே அச்செல்வத்தை ஈட்டுக. பகையாளிகளின் செருக்கை முறியடிக்க உதவும் பொருள் செல்வமே அந்த செல்வத்தை சேர்ந்து விடுதலே சிறப்பென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்

76/758:திருக்குறள்-பொருள் செயல்வகை

Image
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வார் வினை.தன்கையில் பொருள் உண்டான பின் காரியம் செய்வோம் என்பது யானை மலையேறி போரைக் காண விழைவது போன்றதாகும். தனது கையில் முதலீடுனாது வந்த பின் ஒரு செயலில் இறங்கலாம் என நினைப்பது யானை என்பது மலைமேலேறி சண்டையை காண விரும்புவது போலாகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

76/757:திருக்குறள்-பொருள் செயல்வகை

Image
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு. அன்புத்தாய் ஈன்ற அருள் எனும் குழந்தை செல்வம் எனும் பணிப் பெண்ணால் வளர்க்கப்படும்.பாசத்தாய் பெற்றெடுத்த கருணை என்ற குழந்தையை செல்வத்தால் வளர்த்தெடுக்கப்படுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

76/756:திருக்குறள்-பொருள் செயல்வகை

Image
உறுபொருளும் உல்க பொருளும் தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். நாட்டின் வரியும் வணிகமும் பகைவரின் திறைமையின்மையும் அரசனின் வருவாய் எனப்படும்.நாட்டுமக்களின் வரியும் இறக்குமதி வரியும் நாடுகளை ஆக்கிரமித்து அதனால் அறவிடபடும் அந்தந்த நாடுகளின் வரியும் ஒரு ஆளுமை நாட்டுக்கு பெரும் செல்வங்களாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

76/755:திருக்குறள்-பொருள் செயல்வகை

Image
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல்.அன்பும் அருளுமின்றி தவறான வழியில் வந்த செல்வத்தை அனுபவியாமல் அழியவிடவேண்டும்.எவ்வளவு உயர்ந்த செல்வங்களாக இருப்பினும் சிறந்த வழியில் வராத செல்வத்தை வாழ்வில் ஏற்றுக்கொள்ளமல் வாழுதல் வாழ்வினில் சிறப்பைத்தருமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

76:754:திருக்குறள்-பொருள்-செயல்வகை

Image
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்றிந்து தீதின்றி வந்த பொருள். குற்றமற்ற வழியில் திறமையுடன் பெற்ற செல்வம் அறமும் இன்பமும் தரும்.நேர்மையான வழியில் திறமையுடன் உழைத்து சம்பாதிக்கும் செல்வங்கள் வாழ்வினில் அறத்தையும் இன்பத்தையும் சுகமான வாழ்வையும் தருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.