76/758:திருக்குறள்-பொருள் செயல்வகை
திருக்குறள்:
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைகத்துத்
ஒன்று உண்டாகச் செய்வார் வினை. (குறள் 758 - அதிகாரம்: பொருள்செயல்வகை)
பொருள்:
தன்னிடத்தில் (முன்பே) பொருள் கைவசம் இருக்க, அதனைக்கொண்டு ஒரு செயலைச் செய்வது என்பது, குன்றின்மேல் ஏறி நின்று யானைப் போரைக் காண்பது போன்றது (எவ்வித ஆபத்துமின்றி எளிதாக வெற்றிகரமாகச் செய்து முடிக்கலாம்).
விரிவாக்கம்:
எந்தவொரு செயலிலும் ஈடுபடும் முன்பு அதற்கேற்ற மூலப்பொருளோ அல்லது பணமோ நம் கையில் இருக்க வேண்டும். உரிய முதலீடு அல்லது வசதியுடன் ஒரு காரியத்தில் இறங்கினால், பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டு கீழே நடக்கும் யானைப் போரைக் கண்பதைப் போல எந்தத் தீங்கும் இல்லாமல் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றலாம். உரிய செல்வம் இல்லாமல் திட்டமிடுவது ஆபத்தில் முடியும் என்று வள்ளுவர் எச்சரிக்கிறார்.
English Translation:
Thirukkural:
Kundreri Yaanaippor Kandratraal Tankaikaththu
Ondru Undaagach Seivaar Vinai.
Meaning:
To perform an action with one's own capital in hand is like standing on a hill and watching an elephant fight (safe and easy).
Explanation:
Valluvar illustrates that executing any venture with adequate financial resources already secured is completely safe and advantageous, akin to watching a battle from the safety of an elevated mountaintop.
— தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.
[God to man is Gita; Man to God is Thiruvasagam; Man to man is Thirukkural].
"தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை; தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை."

Comments