76/760:திருக்குறள்-பொருள் செயல்வகை
திருக்குறள்:
ஒண்பொருள் காழ்ப்ப இயற்ற யார்க்கும்
எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு. (குறள் 760 - அதிகாரம்: பொருள்செயல்வகை)
பொருள்:
சேர்க்க வேண்டிய சிறந்த பொருளைப் பலரும் அறியும் வண்ணம் மிகுதியாகச் சேர்த்தால், அறமும் இன்பமும் ஆகிய மற்ற இரண்டும் யாருக்கும் எளிதில் கிடைக்கும்.
விரிவாக்கம்:
வாழ்க்கையில் அறநெறிப்படிப் பொருளைத் தேடிச் சேர்த்து நிலைநிறுத்திக் கொண்டால், மனிதனின் மற்ற இரண்டு இலக்குகளான அறமும் இன்பமும் தாமே எளிதாக வந்து சேரும். பொருட்செல்வம் என்பது வெறும் பணமல்ல; அதுவே ஒருவன் அறம் செய்யவும், இன்பமான வாழ்க்கையைத் தடையின்றி வாழவும் வழிவகுக்கும் அடிப்படைத் பலமாகும் என்று வள்ளுவர் எடுத்துரைக்கிறார்.
English Translation:
Thirukkural:
Onporul Kaazhappa Iyatra Yaarkkum
Enporul Eanai Irandum Orungu.
Meaning:
To those who accumulate abundant and faultless wealth, the other two (virtue and pleasure) will also become easily accessible.
Explanation:
Valluvar emphasizes that wealth is the foundational pillar of life. When material resources are acquired through righteous means and in abundance, practicing virtue and enjoying legitimate pleasures naturally follow with ease.
— தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.
[God to man is Gita; Man to God is Thiruvasagam; Man to man is Thirukkural].
"தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை; தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை."

Comments