76/755:திருக்குறள்-பொருள் செயல்வகை
திருக்குறள்:
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல். (குறள் 755 - அதிகாரம்: பொருள்செயல்வகை)
பொருள்:
அன்போடும் அருளோடும் பொருந்தாத நெறியில் சேர்த்துவரும் செல்வத்தை, அதனைத் தழுவிக்கொள்ளாமல் (ஏற்றுக்கொள்ளாமல்) தாமாகவே அழிந்துபோகும்படி விட்டுவிட வேண்டும்.
விரிவாக்கம்:
வாழ்க்கையில் பொருள் ஈட்டுவது அவசியம்தான் என்றாலும், அந்தச் செல்வம் பிறர் கண்ணீர் சிந்தவைத்தோ, வஞ்சகம் செய்தோ, அன்பும் அருளும் இல்லாத கொடூரமான முறையிலோ ஈட்டப்பட்டதாக இருக்கக் கூடாது. அறநெறிக்குப் புறம்பாகத் தீய வழிகளில் வரும் செல்வம் எவ்வளவுதான் அதிகமாக இருந்தாலும், அதனை நாம் ஏற்கக் கூடாது; அது நம்மைவிட்டுப் பாழாய் நசிந்து போகும்படி விலக்கிவிட வேண்டும் என்று வள்ளுவர் எச்சரிக்கிறார்.
English Translation:
Thirukkural:
Arulodum Anbodum Vaaraap Porulaakkam
Pullaar Purala Vidal.
Meaning:
Wealth acquired without compassion and love should not be embraced; it should be left to perish by itself.
Explanation:
Valluvar cautions that financial gains amassed through unrighteous, cruel, or unethical means—void of empathy and grace—should be completely rejected and allowed to ruin rather than integrated into one's life.
— தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.
[God to man is Gita; Man to God is Thiruvasagam; Man to man is Thirukkural].
"தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை; தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை."

Comments