2/12:திருக்குறள்-வான்சிறப்பு



2/12:திருக்குறள்:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.

பொருள்:

உண்பவருக்கு நல்ல உணவுகளை விளைவித்துத் தருவதோடு, அங்ஙனம் உண்பவருக்குத் தானும் ஓர் உணவாக (குடிநீராக) மாறிப் பயன்படுவது மழையாகும்.

விரிவாக்கம்:

வான்மழை உலகின் அனைத்து உயிரினங்களின் தாகத்தையும் தீர்க்கக்கூடிய தாகசாந்தியாக விளங்குவதோடு, இயற்கை செழித்து வளரவும் காரணமாகின்றது. பயிர்கள் வளரத் தேவையான நீரைக் கொடுத்து நல்ல உணவை உருவாக்குவதோடு அல்லாமல், உயிர்கள் அருந்தும் குடிநீராகவும் தானே மாறிப் பயன்படுவது வான்மழையின் தனிச்சிறப்பாகும் என்பதை இக்குறள் எடுத்துரைக்கின்றது. தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.



English Translation:

Thirukkural:

Thupparkkuth Thuppaaya Thuppaakkith Thupparkkuth

Thuppaaya Thaooum Mazhai.

Meaning:

Rain creates wholesome food for those who eat, and itself becomes drinkable nourishment for them as well.

Explanation:

Rainfall plays a dual role in sustaining life: it nourishes the soil to cultivate crops and produce wholesome food, while also serving directly as pure drinking water to quench the thirst of all living beings. Rain is thus the essential foundation of both agriculture and survival.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்