10/95:திருக்குறள்-இனியவை கூறல்

பணிவுடையான் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப்பிற.பெரியார்களிடத்து பணிவும் அனைவரிடத்தும் இனிய சொற்கள் பேசுதலே ஒருவனுக்கு அணியாகும் இவையன்றி உடம்பில் அணியும் அணிகலன்கள் அணியாகாது.மனிதர்களிடத்தில் பண்பும் பணிவும் அன்பும் இரக்கமான தாழ்மையான இனிய வார்த்தைகளை பேசுதலே மனிதர்களுக்கு நல்ல சிறப்பைதரும் இவற்றையெல்லாம் விட மனிதர்கள் உடம்பில் அணிந்திருக்கும் ஆடை ஆபரணங்களால் என்றுமே சிறப்பிருக்காது என எடுத்துரைக்கின்றது திருக்குறள். திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்