1/4:திருக்குறள்- கடவுள் வாழ்த்து
1/4:
திருக்குறள்:
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
பொருள்:
விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு எக்காலத்திலும் எவ்விதத் துன்பமும் உண்டாவதில்லை.
விரிவாக்கம்:
மனிதர்கள் தங்கள் வாழ்வில் எதன் மீதும் விருப்போ வெறுப்போ அற்ற இறைவனின் நன்னெறிகளைப் பின்பற்றி வாழ வேண்டும். அவ்வாறு இறைவனை மனதாரப் பற்றி நின்று, விருப்பு வெறுப்பற்ற நிலையைக் கைக்கொண்டு வாழ்பவர்களுக்கு வாழ்வின் எக்கட்டத்திலும் எவ்விதத் துன்பமும் நேர்வதில்லை என்பதை இக்குறள் எடுத்துரைக்கின்றது.
English Translation:
Thirukkural:
Venduthal Vendaamai Ilaandai Sernthaarkku
Yaandum Idumbai Ila.
Meaning:
To those who cling to the feet of the One who has neither desire nor aversion, sorrow shall never come at any time.
Explanation:
The Divine is free from personal attachments and dislikes. When individuals meditate upon these selfless divine qualities and practice non-attachment in their daily lives, they transcend all mental distress and remain untouched by life's misfortunes.
Comments