23/223:திருக்குறள்-ஈகை
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே உள.இரந்தவர்கு இல்லையென்று கூறி துன்பம் கொடாமல் கொடுப்பது நல்குடி பிறந்தவர் பண்பு.உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கு இல்லையென்று சொல்லாத குணமுடைய மனிதர்களுக்கு தாங்கள் வறுமையுற்று துன்பமுற்று வாழவேண்டிய வாழ்க்கை காலம் வந்திருந்தாலும் தங்களிடம் எதுவும் இல்லையே என்று சொல்லும் குணமிருக்காதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.
Comments