27/264:திருக்குறள்-தவம்

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும்.அறமற்றவரை அழித்தாலும் அறமறிந்தோரை உயர்த்த நினைத்தாலும் தவவலிமை பெற்ற துறவிகளுக்கு முடியும்.நல்ல வழியில் வாழ்கையை நடத்தாதவரை அழித்து விடுவதும் அறநெறிகளுடன் வாழும் மனிதர்களை வாழ்வில் உயர்ந்த நிலையில் வாழவைப்பதும் தவத்தில் முற்றிலும் துறந்து தவவலிமைகொண்ட அந்த முனிவர்களால்தான் அற்புதத்தை நிகழ்த்த இயலும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ். 

Comments