27/266:திருக்குறள்-தவம்

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார் மற்றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.தவம் செய்பவரே தமக்கு உறுதியாக்கிய நற்செயலை செய்ய இயலும் தவம் செய்யாதவர் ஆசையின்பால் தீமை செய்வார்.தவம் செய்யும் முனிவர்கள் தங்களின் தேவைகளையும் கடமைகளையும் ஏழ்மையாக நிறைவேற்றிக்கொண்டு இந்த பூமியில் வாழுகின்றவர்கள் தவத்தினை மேற்ககொள்ளாதவர்கள் விருப்பியவற்றை அடைவதற்காக ஆசைகளுக்கு அடிமைகளாகி  அலைந்து திரிந்து  தங்களின் உடலுக்கும் உயிருக்கும் தீங்கை தேடித்தேடி வாழ்வில் மரணத்தை நெருங்கி கொண்டிருக்கும் மனிதர்களவார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்