4/31:திருக்குறள்-அறம் வலியுறுத்தல்
4/31:
திருக்குறள்:
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
பொருள்:
அறநெறி ஒருவனுக்குப் புகழையும் தரும்; செல்வத்தையும் தரும். ஆகையால், உயிர்களுக்கு அந்த அறத்தை விட நன்மையளிக்கும் பேறு வேறு எதுவுமில்லை.
விரிவாக்கம்:
மனிதர்கள் வாழ்வில் பெறத்தக்க மேன்மையான சிறப்பையும், நேர்மையான வழியில் சேரும் செல்வத்தையும் தரக்கூடியது அறநெறியே ஆகும். எனவே, மனித வாழ்க்கைக்குச் சமுதாய உயர்வை அளித்து, செழிப்பான வாழ்வைத் தரும் அறத்தை விட மேலான வளர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை என்பதை இக்குறள் எடுத்துரைக்கின்றது.
தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.
English Translation:
Thirukkural:
Sirappeenum Selvamum Eenum Arathinoongu
Aakkam Evano Uyirkku.
Meaning:
Virtue yields both renown and wealth; what higher source of prosperity can there be for a soul?
Explanation:
Living a virtuous and ethical life leads to double rewards: it earns unconditional respect and social standing, while also paving the way for honest material abundance. Since righteous living brings both honor and security, nothing serves as a greater asset to human life than virtue itself.

Comments