4/32:திருக்குறள்- அறன் வலியுறுத்தல்


4/32:

திருக்குறள்:

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு.

பொருள்:

ஒருவனுக்கு அற நெறியை விட மேன்மையான நன்மையும் இல்லை; அந்த அறத்தை மறந்து வாழ்வதை விட மேன்மையான கேடும் இல்லை.

விரிவாக்கம்:

மனிதர்கள் அறத்தின் வழியில் நடந்து பிறருக்கு நற்செயல்களைச் செய்து வாழ்வதுதான் அவர்களின் வாழ்க்கைக்கு மிகச்சிறந்த நன்மையையும் உயர்வையும் தரும். மாறாக, அற வழியை மறந்து, நன்னெறிகளைப் பின்பற்றாமல் வாழ்கின்ற வாழ்க்கை ஒருவனுக்கு என்றும் சிறப்பைக் தராது; அது மிகப்பெரிய தீமையையும் அழிவையுமே தேடித்தரும் என்பதை இக்குறள் எடுத்துரைக்கின்றது.

தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.



English Translation:

Thirukkural:

Arathinooungu Aakkamum Illai Athanai

Marathalin Oongkillai Kedu.

Meaning:

There is no greater gain in life than virtue, and no greater loss than forgetting to practice it.

Explanation:

Adhering to ethical conduct and performing righteous deeds provides the highest form of personal and spiritual growth. Conversely, neglecting virtue and abandoning moral boundaries leads to ultimate downfall. Therefore, staying committed to righteousness brings ultimate well-being, while neglecting it causes true ruin.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்