4/36:திருக்குறள்-அறன் வலியுறுத்தல்


4/36:

திருக்குறள்:

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.

பொருள்:

'பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்று தள்ளிப்போடாமல் இப்போதே அறச்செயல்களைச் செய்ய வேண்டும்; அந்த அறமானது நாம் இறக்கும் காலத்தில் அழியாத உறுதுணையாக நிலைத்து நிற்கும்.

விரிவாக்கம்:

மனிதர்கள் 'முதுமை காலத்தில் அறம் செய்துகொள்ளலாம்' என்று தள்ளிப்போடாமல், இளமைக் காலம் முதலே தங்களால் இயன்ற நற்செயல்களைச் செய்ய வேண்டும். வாழ்க்கையின் இறுதி காலத்தில் செல்வமும் சுற்றமும் கைவிட்டாலும், நாம் செய்த அறச்செயல்கள் மட்டுமே நம் புகழாகவும், மன அமைதி தரும் அழியாத துணையாகவும் என்றும் நிலைத்து நிற்கும் என்பதை இக்குறள் எடுத்துரைக்கின்றது.

தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.


English Translation:

Thirukkural:

Andrarivaam Ennaathu Aranjeyga Matrathu

Ondrungkaal Pondraath Thunai.

Meaning:

Do not delay virtuous actions saying "we will see to it later"; practice righteousness now, for it will remain an imperishable companion in death.

Explanation:

People often postpone good deeds for their old age, but life is uncertain. One should practice virtue continuously throughout life without procrastination. When everything else leaves us at the end of life, the good deeds and righteousness we practiced will remain as our timeless legacy and unshakeable inner support.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்