4/38:திருக்குறள்-அறன் வலியுறுத்தல்
4/38:
திருக்குறள்:
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
பொருள்:
ஒருவன் தன் வாழ்நாளில் ஒரு நாள்கூட வீணாகக்ழிய விடாமல் தொடர்ந்து அறச்செயல்களைச் செய்வானானால், அந்த அறமே அவன் மீண்டும் பிறவி எடுக்கும் வழியை அடைக்கும் கல்லாகும்.
விரிவாக்கம்:
மனிதர்கள் தங்களுக்குக் கிடைத்த வாழ்நாளில் நாள்தோறும் இடைவிடாது பிறருக்கு நன்மைகளையும் அறச்செயல்களையும் செய்து வாழ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்யப்படும் மேன்மையான அறப்பணியானது, ஒருவனின் தீவினைகளை நீக்கி, அவன் மீண்டும் பிறவித் துன்பத்தில் சுழலாமல் பிறவிப் பெருங்கடலைக் கடந்து முக்தி அடைவதற்கான கல்லாக அமைந்து காக்கும் என்பதை இக்குறள் எடுத்துரைக்கின்றது.
தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.
English Translation:
Thirukkural:
Veezhnaal Padaaamai Nandraatrin Ahthoruvan
Vaazhnaal Vazhiyadaikkum Kal.
Meaning:
If a person allows no day to pass without performing a good deed, such virtue becomes a stone that blocks the path to future rebirths.
Explanation:
Consistency in ethical living is paramount. Every single day presents an opportunity to perform righteous acts. By continuously dedicating oneself to noble and compassionate deeds without wasting time, one purifies their karma, paving the way for liberation from the endless cycle of birth and rebirth.

Comments