4/40:திருக்குறள்-அறன் வலியுறுத்தல்




திருக்குறள்:

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி.

பொருள்:

ஒருவன் தன் வாழ்நாளில் தவறாமல் செய்யத் தக்கது அறச்செயல்களே; செய்யாமல் விலக்கத் தக்கது பழிச் செயல்களே ஆகும்.

விரிவாக்கம்:

அறநெறி என்பது மனித வாழ்க்கையின் இலக்கணம் ஆகும். ஒருவன் தனது வாழ்வில் எந்தச் சூழலிலும் செய்ய வேண்டிய நற்கடமைகளைத் தவறாமல் செய்ய வேண்டும். அதேபோல, தன் புகழுக்கும் சமுதாயத்திற்கும் கேடு விளைவிக்கும் பழிச்செயல்களை முழுமையாகத் தவிர்த்து வாழ வேண்டும். அறத்தை விரும்பிச் செய்வதும், பழியை விலக்கி வாழவதுமே சிறந்த வாழ்க்கையின் அடையாளம் என்பதை இக்குறள் எடுத்துரைக்கின்றது. தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.


English Translation:

Thirukkural:

Seyarpaala Thorum Arane Oruvarku

Uyarpaala Thorum Pazi.

Meaning:

That which ought to be done is virtue; that which ought to be avoided is vice.

Explanation:

The essence of human duty can be summarized simply: actively adopt righteous deeds and strictly refrain from dishonorable actions. Embracing virtue while completely eschewing actions that bring blame or guilt forms the foundation of a noble and morally fulfilled life.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்