5/50:திருக்குறள்-இல்வாழ்க்கை
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் இவ்வுலகில் வாழவேண்டிய நெறியுடன் வாழ்பவன் வானுலகத்தில் வாழும் தேவர்களுக்கு ஒப்பாவான்.இந்தப் பூவுலகில் மனிதர்கள் ஆகிய மானிடப்பிறவிகள் வாழும் நெறிகள் தவறாது வாழ்ந்து வந்தால் வின்னுலகில் வாழும் தேவர்களுக்கு ஈடாவார்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம்.
Comments