1330 Thirukkural couplets explained in simple Tamil – with meanings for Arathuppaal, Porutpaal and Kaamathuppaal. Easy Tamil explanation for worldwide—SEO
7:ஆத்திசூடி
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
7:எண் எழுத்து இகழேல்.சொற்பொருள்எண்:விஞ்ஞான ஆராய்ச்சிக்கு அடிப்படையான எண்ணையும்:எழுத்து இலக்கிய வளர்ச்சிக்கு அடிப்படையான எழுத்தையும்:இகழேல்- அலட்சியம் செய்யாதே எண் எழுத்து இகழேல் கணித இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல்நன்கு கற்க வேண்டும்.
1/1: திருக்குறள்: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. பொருள்: எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்னும் அகரத்தை முதலாகக் கொண்டுள்ளன; அதுபோல, இந்த உலகம் ஆதிபகவனாகிய இறைவனை முதலாகக் கொண்டு இயங்குகிறது. விரிவாக்கம்: உலகில் உள்ள மொழிகளின் அனைத்து எழுத்துக்களுக்கும் தொடக்கமாக 'அ' என்னும் அகர ஒலி எவ்வாறு அமைந்திருக்கிறதோ, அதுபோலவே பேரண்டத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் வாழ்வியலுக்கும் ஆதிபகவனே முதன்மைக் காரணியாக விளங்குகிறான். இறைவனே அனைத்து இயக்கங்களுக்கும் தொடக்கமும் ஆதாரமும் ஆவான் என்பதை இக்குறள் எடுத்துரைக்கின்றது. English Translation: Thirukkural: Agara Mudala Ezhuthallam Aadhi Bhagavan Mudatre Ulagu. Meaning: As the letter 'A' is the starting point of all alphabets, so is the Primordial God the origin of the entire universe. Explanation: Just as every written language and sound begins with the fundamental vowel 'A', the existence and operation of the universe depend entirely on the Divine Creator. God stands as the supreme, foundational source for ...
39/388: முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்றும் வைக்கப்படும்.முறையோடு காக்கும் மன்னனை மக்கள் இறைவனாகக் கருதுவர்.மக்களை நல்லாட்சி செய்யும் அரசாங்கத்தை மக்கள் போற்றுவார்கள் நல்லாட்சியாக நடத்தப்பட்டிருந்தால் அதே அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வரலாலம் மக்களின் வரவேற்ப்பை பெற்ற அரசாக விளங்கும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.
40/391:கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.கற்கவேண்டிய நூல்களை தெளிவாகக் கற்று அந்நூல் நெறிப்படி வாழவேண்டும். கற்பவைகளை கற்கவேண்டும் அதுவும் நெறிப்பட கற்றல்வேண்டும் கற்றநூல்களின் படி சிறந்த வாழ்வியலை வாழவேண்டும் அதுவே இந்த உலகில் சிறப்பைத்தரும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.
Comments