7:67 திருக்குறள்-மக்கட்பேறு

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்.மகனுக்குத் தந்தை செய்யும் அரும் நன்மை யாதெனில் அவனை எத்தநிலையிலும் கற்றவர் சபையில் முதன்மையும் உயர்வையும் அடையச் செய்வதே ஆகும் . இந்த உலகத்தின் மனித வாழ்வுதனில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செய்யும் அருமையான நன்மை என்னவென்றால் கற்றோரின் வாழ்விற்கு ஈடாக முதன்மையும் உயர்வையும் அடையச் செய்வதும்.பிள்ளைகளை நல்லதோர் நிலையில் வாழவைப்பதே பிள்ளைகளின் வாழ்வுக்கு மிகச்சிறந்தது எனவும் அதுவே பெற்றோர்களின் கடமையாகும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.திருக்குறள் புலமை பாலாஜீ  பாலசுப்பிரமணியம்

Comments