8/75:திருக்குறள்-அன்புடைமை
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்துஞ் சிறப்பு. இவ்வுலகில் அன்புடனிருந்து இல்வாழ்க்கையில் இன்புற்றவர் மறுபிறவியில் அடையும் பேரின்பம் அவர் அன்புடையவராக ஒழுகிய ஒழுக்கத்தின் பயனை. இல்லறவாழ்வில் அன்பும் பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவர்களாக மனிதர்கள் வாழ்த்து இறந்து போனால் மறுபிறவி என்ற ஒன்று அந்த மனிதர்களுக்கு இருக்குமாயின் அதில் அவர்கள் பெரின்பம் அடையலாம் இந்த மனிதர்கள் முற்பிறவியில் செய்த ஒழுக்கத்தின் பயனை என எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் .
Comments