9/89:திருக்குறள்-விருந்தோம்பல்
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு.பெருஞ்செல்வந்தாக வாழுங்காலத்தில். விருந்தினரை உபசரிக்காகதவிரின் நிலை வறுமையே ஆகும் இது அறிவற்றவர்களிடத்தில் காணப்படும்.மனிதர்களின் வாழ்வில் செல்வமும் செழிப்புமாக வாழும் காலத்தில் வீட்டுக்கு வரும் விருந்தினரை முழுமனதாக விருந்து உபச்சாரம் அளித்து வாரவேற்றால் உங்கள் வாழ்வில் வறுமை என்றும் நேராது.அப்படி உபசரிக்கவிடின் உங்கள் செல்வங்கள் எல்லாம் அழிந்து வறுமை வாழ்க்கை நிலைக்கு தள்ளப்படுவீர்கள் இச்செயல் அறிவற்ற செயல் ஆக கருதப்படுகிறது என எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்.
Comments