சிறார்களின் சிந்தனையில்
சிறுவர்கள் படைகளில் சேர்க்கப்படகூடாது என்று இந்த உலகம் எமக்கு பணிந்துரை செய்கிறது ! உண்மையாக இருக்கலாம் சிறார்கள் சொன்னதை செய்யும் தகமையுடையவர்கள் ஆனால் சிந்திக்கும் தகமையில்லாதவர்கள் சிறார்களை சட்டத்தால் தண்டிக்கமுடியாது ! சிறார்கள் தாங்கள் மற்றவர்களை ஏன் சுடுகின்றோம் என்றே தெரியாமலே சுடக்கூடும் பதின்எட்டுவயதுக்கு முன் சுதந்திரத்தையோ சுதந்திர அடிப்படையிலான எண்ணங்களையோ சிறார்கள் அறிந்திருக்கவாய்ப்பில்லை என்பதே உண்மை ! சிறார்கள் தங்கள் கைகளில் ஆயுதங்களை வைத்திருக்கும் போது அதே சிறார்கள் முன்கூட்டியே யாராலும் தண்டிக்கப்பட்டிருத்தால் கோபத்தை நினைவில் வைத்திருக்கும் சிறார்கள் துப்பாக்கிபிரயோகம் செய்யக்கூடும் ! சிறார்களுக்கு சீர் திருத்திப்பார்க்கும் தன்மை இல்லாதவர்கள் இதனால்தான் பதின் எட்டு வயதுக்கு உட்பட்ட சிறார்கள் பெற்றோர் பாதுகாப்பில் வாழ்கின்றார்கள் பதின் எட்டுவயதுக்கு மேலே அவர்களுக்கு சிந்திக்கும் தகமையுடையவர்களாக தகமையை பெறுவாதாகவும் உலக ஆராச்சியாளர்கள் கூறுகின்றார்கள் ! சிறார்கள் படிக்கவேண்டும் என்றே பெற்றோர்கள் விரும்புவார்கள் ஆயுதம் ஏந்தவேண்டும் என்று எந்த பெற்றோர்களும் நினைக்க மாட்டார்கள் ! நாட்டுக்கு சுதந்திரம் தேவைதான் சுதந்திரம் விரும்பிகளை வைத்தும் சிந்தனையாளர்களை கொண்டும் படைக்கு தகமைகள் உடையவர்களை முன் நிறுத்தி படை நாடத்தினால் இந்த உலகம் எம்மை வரவேற்ககூடும் சின்னம் சிறு சிறரார்களை சிறகை உடைத்து சிறுவயதிலேயே சீர்திருத்தபள்ளிக்கு அனுப்பாதீர்கள் சிறைகளில் கிடந்து மரணத்தை எதிர் நோக்க வைக்காதீர்கள்
சீர்குலைந்த ஒரு சமுதாயத்தை உருவாக்காதீர்கள்
சிறார்களின் சிந்தனையில்
பாலாஜீ பாலசுப்பிரமணியம்
சீர்குலைந்த ஒரு சமுதாயத்தை உருவாக்காதீர்கள்
சிறார்களின் சிந்தனையில்
பாலாஜீ பாலசுப்பிரமணியம்
Comments