42/416:திருக்குறள்-கேள்வி


எனைத்தானும் நல்லவை கேட்டு அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். எவ்வளவு நல்லவற்றை கேட்கின்றோமோ அவ்வளவுவிற்கும் சிறந்த பெருமை தரும்.மனிதர்களின் வாழ்வுதனில் வாழ்வியல் சிறப்பு என்ற அத்தியாயம் சிறப்பாக இருந்தல் வேண்டும் அதற்காக நல்லவிடயங்களை கேட்டு மகிழவேண்டும் எவ்வளவு நல்லவிடயங்களை கேட்டு அறிந்து வாழ்க்கை நடாத்துகின்றோமோ அவ்வளவு சிறந்த வாழ்க்கை அமையும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்

Comments