51/502:திருக்குறள்-தெரிந்து தெளித்தல்

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு.நல்குடியில் பிறந்து குற்றமில்லாமல் பழிக்கு நாணுபவனே நம்பத்தகுந்தவன்.உயர் குடியில் பிறந்தவர்கள் குற்றங்களை புரிய அஞ்சுவார்கள் கொலை கொள்ளையை தவிர்த்து இந்த உலகில் நற்பண்புடைய மனிதர்களாக வாழவே விருப்புவார்கள் உயர்குடியில் பிறக்காதவர்கள் நற்பண்பில்லாதார் இந்த உலகில் எப்படி வாழ்ந்தாலும் சரி வாழ்ந்து விட்டு போகலாம் என நினைத்து குற்றங்களைப்புரிந்து வாழ்வியல் நடத்தும் மனிதர்கள் இவர்களை மக்கள் எப்பவும் நம்பலாகாது எந்த மனிதர்கள் சிறு தவறுகளுக்காக அஞ்சுகின்றார்களோஅவர்களே வாழ்வில் நம்பந்தகுந்த மனிதர்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் 

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்